Thursday, December 27, 2007

இஸ்லாமிய அரசியல் சிந்தனைத்தளத்தில்; ஜனநாயகம் (ஆங்கில மூலம் கலாநிதி அஸாம்.எஸ்.தமீமி - தமிழில் அ.அஸ்மின்

பகுதி 01:

கடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இஸ்லாமிய அரசியல் தளத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், ஜனாநாயக சிந்தனையின் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. அத்துடன் கடந்த இரு நூற்றாண்டு காலத்தின் அரபு ஆரசியல் சிந்தனையாளர்களான Rifa'a Tahtawi (1801-73), Khairuddin at-Tunis (1810-99), Jamal ad-Din al-Afghani (1838-97), Muhammad Abduh (1849-1905), Abdurrahman al-Kawakibi (1849-1903), Rashid Rida (1865-1935), Hasan al-Banna (1904-49), Ali Abd Ar-Raziq (1888-1966), Sayyid Qutb (1906-66), Sa'id Hawwa, and Malik Bennabi (1905-73).அகியோரது கருத்துக்களிலும், செய்யத் குத்ப் உடைய அரசியல் கருத்துக்களில் மௌலானா மௌதூதி ( 1903- 79) தாக்கம் குறித்தும் ராஷித் கண்ணூஸியுடைய கருத்துகளில் மாலிக் இப்னு நபியுடைய சிந்தனைத்தாக்கம் குறித்தும் எமது சமகால இஸ்லாமிய அமைப்புகளில் ஜனநாயாத்தின் தாக்கம் குறித்தும் கருத்துக்களை பதிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

நவீன அரபு தேசியவாத எழுச்சியுடன் ஜனநாயகமும் அரபு அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்ததொடங்கிவிட்டது.ஜனநாயகம் பற்றிய எண்ணக்கருவானது பலதரப்பட்ட அரசியல் சமூக மேம்பாடுகளைத்தொடர்ந்து அரபு உலகில் வளர்ச்சிகாணத்தொடங்கியது.அரபு அறிவியல் உலகில் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடலகளை நோக்கும் பொழுது

Rifa'a Tahtawi (எகிப்திய ஜனநாயகத்தின் தந்தை) எழுதிய Takhlis Al-Ibriz Ila Talkhis Bariz,(1834) என்னும் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சுப்புரட்சி மற்றும் பிரெஞ்சின் ஆட்சி முரைகள் குறித்த கருத்துக்களில் இருந்தும், அவர் ஜனநாயகத்தை இஸ்லாமிய அரசியல் முறைமைகளுடன் ஓப்பிட்டு இஸ்லாத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காட்டமுனைவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது. அத்துடன் மத சுதந்திரம் என்பது மதநமிபிக்கையின் பால் உள்ள சுதந்திரம்தான், எனவே இஸ்லாம் இதனை அங்கீகரிக்கின்றது, இதனைப்போலவே அரசியலிலும் மாற்றுக்கருத்து உள்ளதனமையும் மார்க்கத்துடன் முரண்பாடு உடைய விடயம் இல்லை என அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.

இத்தொடரில் மிக முக்கியமான ஒரு அம்சமாக Khairuddin At-Tunisi அவர்களுடைய Aqwam Al-Masalik Fi Taqwim Al- Mamalik (The Straight Path to Reforming Governments) நூல் அமைகின்றது. அதில் அவர் அப்போதைய அரசியல் முறைமையினை எவ்வாறு சீராக்கம் செய்தல் என்ற கருத்தில் அவர் சொன்ன இரு கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அப்போதய சிந்தனையாளர்களை நோக்கி, மக்களின் அந்தஸ்த்தினை உயர்த்துவதைவிடவும் அவர்களை பண்பட்டவர்களாக கலாசாரமுடையவர்களாக நாகரீகம் உடையவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துக்கள், அதேபோன்று மக்களே எனைய தேசங்களிடமிருந்து முன்மாதிரிமிக்க சிந்தனைகளையும் நடத்தைகளையும் உதாசீனம் செய்வதை விட்டும் விலகி அவற்றின் நல்ல தன்மைகளை உங்களிடமும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அவை முஸ்லிமல்லாத நாடுகளாயிருப்பினும் அங்குள்ள கண்டுபிடிப்புகள் முற்போக்கான அம்சங்களை புரந்தள்ளிவிடவேண்டாம். எனவே இவ்வாறு அவர் குறிப்பிடுவது அரசியல் ஒழுங்குகளையும் சேர்த்துத்தான் அமைகின்றது.

அனால தியுனிஸியாவின் Ghannouchi மாறுபட்ட கருத்தைக்கொண்டிருந்தார் அவர் Khairuddin அக இருக்கட்டும் அல்லது ஏனைய சமகால இஸ்லாமிய அறிஞர்களாக இருக்கட்டும் அவர்கள் இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொண்ட்வர்களாக அல்லது மாற்றமொன்றை அறிமுகப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள் என்கின்றார், அத்துடன் அவர்கள் முயற்சிப்பதெல்லாம் சமகால, பண்டைய அறிஞர்களின் கருத்துக்களுக்கு இசைவாக இஸ்லாமிய முறைமைகளில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்குத்தான், அத்துடன் மேற்கின் இரவல் அரசியல் முறைமைகளை சட்டபூர்வமாக்குவதற்குத்தான் அவர்கள் முயற்சிக்கின்றார்கள்:

ஆனால் தீட்சன்யம் மிக்க அறிவு முஸ்லிமுடைய தூரநோக்குடன் மிகவும் பின்னிப்பிணைந்தது:வஹியுடைய வரவானது படைப்பாளனது படைப்புகளுக்கான பூரணத்துவமிக்க வழிகாட்டலாகவே அமைகின்றது, அதில் எல்லாமே அடங்கப்பெற்றுள்ளது. என்றகருத்தின் அடிப்படையில்
Khairuddin தனது திட்டங்களை அமுல்நடாத்தும் ஒரு கட்டமாக (As-Sadiqiyah School for teaching modern arts and sciences within an Islamic framework) என்ற ஒரு கலைக்கூடத்தை நிறுவினார், அதில் எமது அடிப்படை மூலாதாரங்களின் மூலமும், அவற்றை திறம்பட கற்றுக்கொள்வதனூடாகவும் எமக்கான மிகவும் வினைத்திறன் மிக்க நிர்வாக கட்டமைப்புகளையும், சிந்தனைகலையும் உருவாக்க முடியும் ,அதனூடாக சமகாலத்தில் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறைமையினை மாற்றியமைத்து, மேற்கிலிருந்து மேற்கொள்ளப்படும் அரசியல் பிரதீயீட்டும் தன்மையினையும் கட்டுப்படுத்த முடியும் என Khairuddin நம்பினார்.

Jamal ad-Din al-Afghani (1838-97)

ஜமாலுத்தீன் ஆப்கானி சமகால அரசியல் குளறுபடிகளுக்கு காரணமாக'adl (justice) and shura (council) நீதம் மற்றும் சூரா முறைமையில் தோன்றிய குறைபாடுகளே காரணம் என்கின்றார். மக்கள் தேர்ட்தல்கள் மூலம் 'adl (justice) and shura (council) அகியவற்றை நிறுவும் முயற்சிகளில் அதிகம் ஆர்வமும் உரிமையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கருதுகின்றார்

இவரது கருத்துக்கள் எழுச்சி மிக்கனவாக அமைந்துள்ளது; மக்கள் தேர்தல் மூலமும், சூறா உருப்புரிமை மூலமும் அரசியலில் நேரடியாக பங்குபற்ற வேண்டும், என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்:('The Despotic Government', published in Misr on 14 February 1879,) எதேச்சாதிகாரமான அராசாங்கம் என்ற தலைப்பில் மிஸ்ர் நாளிதழில் ஆப்கானி எழுதிய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன " எதேச்சாதிகாரமான அரசாங்கமே மக்கள், மக்களாட்சி தொடர்பில் கருத்துக்களைப்பெற்றுக்கொள்ளாமலிருக்கும்படி செய்கின்றது, மக்களாட்சியே உண்மையான மகிழ்ச்சி அமைதி நீதி என்பவற்றின் வடிவமாகும். மக்கள் தமது நடத்தைகள் குறித்தும் கொடுக்கல்வாங்கல், வியாபாரம், இதர நடத்தைகள் தொடர்பிலும் அக்கரையுடன் கூடிய முற்போக்கான அரச முறைமையே மக்கள் ஆட்சி என அடையாளப்படுகின்றது. உண்மையாக மக்கள்: மக்களால் நடத்தப்படும் ஆட்சியிலேயே மக்களாக மதிக்கப்படுவர், எதேச்சாதிகார ஆட்சியில் மக்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களே. மக்களாட்சி எதேச்சதிகார ஆட்சியின் எதிர்வடிவம், எதேச்சாதிகாரம் களையப்படுவதே மக்களாட்சி சிறப்பாக ஆட்சி செய்வதன் முதல் படி, என்று தனது அரசியல் சார்ந்த கருத்தை அவர் முன்வைக்கின்றார், அத்துடன் மக்களாட்சி என இவர் இங்கு குறிப்பிடுவது தாராண்மைத்தன்மை நிரைந்த அமைப்பை அல்ல, மாற்றமாக மிகவும் கட்டுக்கோப்பான அரசியல் முறைமையை ஆகும்.


Muhammad Abduh (1849-1905)


முஹம்மது அப்துஹு, 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய சமுக அறிஞர், அவர் அரசியல் குறித்து கருத்து வெளியிடும் போது, இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளுக்கும் மேற்கத்தேய அர்சியல் சிந்தனித்தளத்திற்கும் நிறையவே வேறுபாடுகளும் தூரமும் நிலவுகின்றது அவை இரண்டும் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும், அவற்றிற்கிடையேயான உடன்பாடுகள்,முரண்பாடுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.அதன்படி நோக்கின் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்டையாகிய : நலன் (maslaha -interest)என்பதும் பயன்பாடு ( manfa'a - utility) என்பதும் மேற்கத்தேய அரசியலிலும் அதே அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதை அவர் காண்கின்றார். ஜனநாயக சூழலில் சூரா (shura) இஸ்லாமிய அரசியல் களத்தில் இஜ்மா (ijma' with consensus) ஆகிய இரண்டும் ஒன்றே என்ற கருத்தை முஹம்மது அப்துஹு கொண்டுள்ளார்.

இறையாட்சி என்பதில் முஹம்மது அப்துஹு உடன்பாடானக்ருத்தை கொண்டிருக்கவில்லை மாற்றமாக ஹாகிம்(governor), காழி (judge), முப்தி என்பவர்கள் மனிதர்களாகவே இருந்துள்ளனர் என்றகருத்தையும் கொண்டுள்ளார். சமகால நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டுமாயின், இஜ்திஹாத் மீண்டும் முடுக்கிவிடப்படவேண்டும், அத்துடன் இதுவரை பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனம் களையப்படவேண்டும், பாராளுமன்ற அரசியல் முறையினை இவர் சிபாரிசு செய்கின்றார், பன்மைத்துவத்தை ஆதரிக்கும் இவர், சமூகத்தின் ஒற்றுமையும் ஐக்கியமும் மேம்பட வேண்டுமாயின் இத்தகைய அரசியல் மாற்றம் தேவையானதுவே என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.

Abdurrahman Al-Kawakibi (1849-1903) அப்துர்ரஹ்மான் அல் கவாகிபி Taba'i' Al- Istibdad (The Characteristics of Tyranny) - ஆட்சியாளனின் குணாம்சங்கள், மற்றும் Umm Al-Qura (The Mother of Villages), தாய்த்தேசம் ஆகிய இரண்டு நூல்களிலும் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கின்றார், மேற்படி நூலில் எதேச்சாதிகார அரசு குறித்தும் அதன் பல்வேறு தோற்றப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பானது இஸ்லாத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான தொடர்பாக அடையாளம் செய்யப்படுள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாகும் ,"எப்பொழுது ஒரு சமுதாயம் அத்ன்மீது விதிக்கப்பட்டுள்ள சமூகக்கடமையிலிருந்தும் நழுவி விடுமே அப்போது அந்த சமூகம் தண்டிக்கபடும் என்ற இஸ்லாத்தின் அரசு சார் கருத்தை இவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Muhammad Rashid Rida (1865-1935)

இஸ்லாமிய அரசியல் களத்தில் அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒருவராக ரஷித் ரிழா அமைகின்றார், முஸ்லிம் சமூகத்தின் அறீவீனமே அரசியல் அநாதை நிலைக்கான காரணம் என வாதிடும் ரஷித் ரிழா அதுவே மோசமான அரசியல் சூழலுக்கும் காரணம் என்கின்றார், இஸ்லாம் இரண்டு விடயங்களை தன்வசம் கொண்டுள்ளது ஒன்று ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்தல், தேசத்தின் விடயத்தில் கலந்தாலோசனை செய்தல் என்பனவே அவ்விரண்டுமாகும், ஆனால் எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் இதனை மறந்ததுமில்லாமல் முன்னையதை ஏற்று பின்னையதை விட்டுவிடும்படி மக்களை ஏவினார்கள். இஸ்லாம் அரசியலுக்குத்தேவையான அடிப்படைகளை நிறுவியது மட்டுமல்லாமல் துணைவிடயங்களில் இஜ்திஹாத் என்னும் வழிமுறையினையும் அறிமுகம் செய்து தந்துள்ளது.ஆனால் அரசியல் தவிர்ந்த ஏனையவிடயங்களில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதின் அளவின் சிறு பகுதியேனும் அரசியல் விடய்த்தில் மேற்கொள்ளப்படவில்லை, இதுவே எமது அரசியல் குழறுபடிகளுக்கான் மூலக்காரணமாக அமைகின்றது.


பகுதி-02

19ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மேலைத்தேய சிந்தனைகளினால் கவரப்பட்டு எப்படியாவது இஸ்லாமிய அரசியல் ஒழுங்கினுள் மேலைத்தேய அரசியல் அமைப்பை புகுத்தி அதற்கு ஒரு இஸ்லாமிய வடிவத்தைக் கொடுத்துவிடவேண்டும் என்று முயற்சித்தனர்: அது வெற்றியளிக்கவில்லை, 15ம் நூற்றாண்டுகளில் உலகின் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதிகளில் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உலக முஸ்லிம்களை இணைத்த ஒற்றுமையின் அடையாளமாக இருந்த கலீபா(தலைமைத்துவம்): 1924ல் ஏற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன், இல்லாமலாக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய சாம்ரஜ்யத்தின் வீழ்ச்சியாகவும் கருதப்படுகின்றது.

இக்காலகட்டத்தில்தான் முஹம்மது அப்துஹு,ரஷீத் ரிழா ஆகியோர் "அல் மனார்" என்னும் அரசியல் மாத இதழொன்றின் மூலம் மக்களை வழிநாடாத்திகொண்டிருந்தனர், இவ்வாறான ஒரு சூழலில் அஹ்மத் பன்னா என்னும் இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் புதல்வனான இமாம் பன்னா அவர்கள் ஒரு திட்டமிட்ட அடிப்படையிலும் இஸ்லாமிய அடிப்படைகளின் அடிப்படையிலும் சமகால உலகின் முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை நிறுவினார்.இன்றும் இஸ்லாமிய உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" என்னும் அமைப்பு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக நிறுவப்பட்டது.

அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" அமைப்பின் வளர்ச்சி மிககுறுகிய காலத்தில் மிகவேகமாக இடம்பெற்றது, பலாஸ்தீன ஆக்கிரமிப்புக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் அரபு உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்க்கத்தின் தோற்றப்பாட்டிற்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. 1939 அளவில் இமாம் ஹஸனுல் பன்னாவின் தலைமையில் வெளியிடப்பட்ட ரஸாயில் rasa'il (messages or articles)என்ற இதழில் வெளியான Bayn al-Ams wa'l-Yawm (Between Yesterday and Today), ஆக்கம் அதிக தாக்கம் உள்ளதாகவும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்கின் அவசியம் குறித்ததாகவும், "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்கத்தின் பணி குறித்துப்பேசுவதாயும் இருந்தது. அதில் இமாம் பன்னா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.




Tuesday, December 25, 2007

இஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால சிந்தனைகள் (அ.அஸ்மின்)

இஸ்லாமிய அரசியலின் புதிய பணி

21ம் நூற்றாண்டு இஸ்லாத்திற்குறியது என்ற கருத்து எவ்வளவு நிஜமானது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலவே குறித்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (2001-9-11) அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மேற்கொண்ட நயவஞ்சகத்தனமான தாக்குதல் நடத்தையும் அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில் அதன் நேசநாடுகளும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக மேற்கொண்ட வன்மப்பாய்ச்சலும், ஒஸாமா பின்லேடன் என்னும் இஸ்லாமிய உலகில் அதிகம் அறிமுகமில்லாத, இஸ்லாமிய சிந்தனைமிக்க அறிஞர்வரிசையில் இல்லாத ஒருவரை இஸ்லாத்தின் முதன்மை முகவரியாகக்காட்ட முற்பட்ட முய்ற்சிகளும்: இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகப்பாரிய வெற்றியும், வாய்ப்பும் என்றே கொள்ள வேண்டியுள்ளது, எனெனில் இஸ்லாத்தினது உண்மையான முகவரி அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சுட்டிக்காட்டிய தீவிரவாதமும், தீவிரவாதிகளுமல்ல.

இத்தகைய நயவஞ்சகமான தாக்குதலைத்தொடர்ந்து, உண்மையான இஸ்லாத்தையும் அதன் முகவரியையும் தேடும் முயற்சிகள் பலதரப்பினரிடமிருந்தும் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகச்சரியான சந்தர்ப்பம், இஸ்லாத்தின் மிகச்சரியான அடையாளத்தையும் அதன் முகவரியையும் உலகிற்கு காட்டும் பொருப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்க்கும், அறிஞர்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் இப்போது பரவலாக மேற்கொள்ள்ப்படுகின்றன. இஸ்லாமியசிந்தனை உலகிற்கு எடுத்துச்சொல்லப்படுவதற்கான மிகச்சரியான தருணம் இதுவே.

"20ம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் செம்படை, ஆயுதப்பலத்தினால் தோற்கடிக்கப்படவில்லை, மேற்கு கையாண்ட அறிவியல், இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணமாகின: 21ம் நூற்றாண்டில் மிகஜாம்பாவானான தோற்றப்பாட்டுடன், அதி நவீன ஆயுததள்பாடங்களுடன் இஸ்லாமிய உலகுக்கு முன்னால் நிற்கின்ற அமெரிகாவும அதன் நேச நாடுகளும் ஆயுதத்தால் தோற்கடிக்கப்பட முடியும் என எதிர்பார்க்க முடியாது, மாற்றமாக சிந்தனைப்போராட்டமும் இராஜதந்திர யுத்தமுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியைப்பெற்றுத்தரும், எனவே இத்தகய ஒரு பாரிய மாற்றத்திற்கு மிக அடிப்படையாக இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு மாற்றம் யாதெனில்; இஸ்லமிய அரசியலில் மேற்கொள்ளப்படவேண்டிய சிந்தனைப்புரட்சியாகும்,

அறபு தேசியவாதாமாயினும், குழுவாதங்களாயினும் இப்போது அவை எமக்கு உதவப்போவதில்லை, எமது சமூகத்தில் அரசியல் தீவிரவாத கருத்துக்களும் ஆயுதவிரும்பிகளும் இல்லை என்பதற்கில்லை எனவே முதற்கண் நாம் இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டும் எமது அரசியல் கருத்துப்பறிமாற்றங்கள் எம்மை வலுப்படுத்தும், எமக்கிடையிலும் பிறமதத்தவரிகளிடையேயும் இஸ்லாமிய அரசியல் குறித்த நல்ல பதிவுகளை அவை ஏற்படுத்தும்,
இக்கருத்தை மொரொகேவின் பின்ஸயீத், சிரியாவின் முஹம்மத் சஹாஹ்ரி, துருக்கியின் பத்ஹுல்லாஹ் குல், ஈரானின் மு.கதாமி இந்தோனேசியாவின் நூர் மாஜித் ஆகிய அறிஞர்களும் கொண்டுள்ளனர்.

Islamic Political Ethics: Civil Society, Pluralism, and Conflict
Edited by Sohail H. Hashmi With a foreword by Jack Miles

எனவே இலங்கையின் முஸ்லிம் அரசியலிலும் இத்தகைய ஒரு பரந்தசிந்தனைத்தளம் பின்னணியாக இருப்பது, அதன் தெளிவானதும் இஸ்லாமிய சிந்தனைசார்ந்த செயற்பாட்டிற்கும் உருதுணையாக அமையும். இனப்பிரச்சினை என்கின்ற புற்று நோயினாலும், யுத்தினால் வாழ்க்கை நடாத்தும் அரசியல் வாதிகளினாலும் அழிவை நோக்கிப்போகும் இலங்கை போன்ற ஒரு தேசம், இஸ்லாத்தின் சரியான வடிவத்தை தெரிந்துகொள்தல் என்பது பல வழிகளில் எமக்கு துணைபோகக்கூடியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அரசியலில் இத்தகைய ஒரு பரந்த பார்வை காணப்படவில்லை, என்கின்ற அதேவேளை இனவாதம் என்ற குருட்டு சித்தாந்தம் அதன் அடிப்படையாக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இனத்துவ சிந்தனைகளுடன் இரண்டரக்கலந்து விட்டதாயினும் அது தவறானதும் மோசமான பின்விளைவுகளைக்கொண்டதுமாகும், எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது இனவாததின் மீது ஏற்படுத்தப்படலாகாது. அது மனிதநலன், அபிவிருத்தி, சமாதனம் என்கின்ற உன்னதமான அடிப்படைகளில் நிறுவப்படவேண்டும், இத்தகைய ஒரு (Paradigm Shift) மனப்பாங்கு மாற்றமொன்று அவசரமானதும் அத்தியாவசியமானதுமாகும்.

இஸ்லாமியா அரசியலும்- தாராண்மைவாதமும்

தாராண்மை வாதம் (
Liberalism) மேற்குலகில் அதன் மோசமான பதிவுகளை வெளிப்படுத்ததொடங்கியிருக்கும் சமகாலத்தில் இஸ்லாமிய உலகினுள்ளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துவருகின்றது, குறிப்பாக நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே அது ஆதிக்கம் செலுத்திவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. நவீன வழிமுறைகளில் மிகக்குறுகிய சித்தாந்தங்களில் வெளியே வந்து முற்போக்காக எமது செயற்பாடுகளில் நாம் ஈடுபடுதல் என்பது தாராண்மைவாததினை ஏற்றுக்கொண்டு எல்லா தளங்களிலும் நாம் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவதைக்குறிக்காது. மாற்றமாக எமது சுயம் தொலக்காமலும் அடிப்படைச்சிந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாத வண்ணம் எமது செயற்பாடுகளை சமகால உலக் ஒழுங்கின் நிலைமகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நிலையே எம்மிடம் வரவேற்கப்படவேண்டும். இங்கு தாரண்மைவாதத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான பிரிகோடு மிகத்தெளிவாக வரையப்படுதல் வேண்டும்.

சமகால இஸ்லாமிய அறிஞர் வரிசையில் மிகவும் இளையவரான (Tharik Ramadhan) தாரிக் ரமழான் (இமாம் ஹஸன் அல் பன்னாவின் பேரன், சயீத் ரமழானின் புதல்வன்) எழுதிய To Be a European Muslim ஏன்ற நூலில் இதுகுறித்துப்பேசியுள்ளார். பொதுவாக மேற்கிலிருந்து வரும் இஸ்லாமிய அறிஞர்களிடையே இத்தகைய ஒரு எச்சரிக்கையான தன்மை அவசியப்படுவதாய் அவர் உணருகின்றார்
பள்ளிக்கூடங்களில் தாராண்மைவத்ததை மையபடுத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதற்கு உள்ள உரிமை, ஒரு மார்க்கத்தின்பால் அல்லது சிந்தனையின்பால நாட்டம் கொண்ட ஒருவர் தனது குழ்ந்தைக்கும் அதன் அடிப்படைகளை வழங்க நினைப்பதும் அதற்கு முயற்சிப்பதும் ஒன்றும் குழ்ந்தைகளின் உரிமைகளை மீறும் செயலாகாது, எனெனில் தாராண்மைவாதத்தை வலுக்கட்டாயமாக சிறுவர்களிடம் பதிக்கும் முயற்சியும்
ஒருவிதத்தில் உரிமை மீறலே அதாவது அவர்களது மார்க்கம் குறித்த அடிப்படைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் உரிமையினை மீறுவதாகும். எனவே இங்கு தாராண்மைவாதம் என்பது நாம் எமது குழந்தைகளுக்கு மார்க்கம் பற்றிய அறிவை வளங்காமலிருப்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமானவர்கள்: குழந்தைக்கு தேவையான எல்லா கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுபோலவே அவர்களுக்கும் மார்ர்க்கத்தின் அடிப்படைகளும் சொல்லித்தரப்படும். எனவே தாரண்மைவாதம் எமக்குள் உள்வாங்கப்படமாட்டாது.

இதுவே எமது அரசியலிலும், எமது எல்லா நடத்தைகளிலும் தாக்கம் செலுத்தவேண்டும்.

எல்லாத்தரப்பினர்க்கும் தகுந்த இடம் சம காலத்தில்
வழங்கப்படுதல் வேண்டும்

இஸ்லாமிய அரசியல் என்பது அதன் ஆரம்பம் தொட்டே எல்லா தரப்பினர்க்கும் உரிய வாய்ப்பளிக்கப்படவேண்டிய பகுதியாகும். இங்கு எல்லாத்தரப்பினர் என்று நான் குறிப்பிடுவது ஆண்களைப்போலவே பெண்களுக்கும் வாலிபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் எமது முயற்சிகளில் அவர்கள் எப்படி பங்கேற்கமுடியாது போகுமே அவ்வாறே எமது வரலாற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாதூ போகும். சமகால இஸ்லாமிய உலகில் வாலிபர்கள் மற்றும் பெண்களின் கனிசமான பங்களிப்பு காணப்படுகின்றது, எம் சமூகத்தின் இயல்பான குறுகிய சிந்தனைப்போக்கில் பெண்களுக்கும் வாலிபர்களுக்குமான இடம் நீண்டகாலமாகவே சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் எமது அரசியல் முயற்சியிலும் இதுவே மீட்டப்படுமாயின் அது எம்மை பல விதங்களில் பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர்களது ஈடுபாடு அத்தியாவசியப்படுகின்ற சூழலில் எம்மிடம் தகுந்த அனுபவமும் ஆற்றலும் உள்ள மனித வளப்பற்றாக்குறை நிறையவே தோன்றியிருக்கும். எனவே இது எம்மிடம் மீண்டும் மீண்டும் மீட்டப்படாதிருக்க இப்போது முதல் எல்லாத்தரப்பினர்க்கும் உரிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்


Tuesday, December 18, 2007

இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றுச்சக்தியின் அவசியம்- இறுதிப்பாகம்- By: A.Azmin

இலங்கை முஸ்லிம் அரசியல் - நேற்று - இன்று - நாளை

நேற்று - 1915 - 2000

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையின் வரலாற்றுடனும் அதன் பாரம்பரிய, கலாசார பண்பாட்டு அம்சங்களுடனும் மிக வலுவான தொடர்பைக் கொண்டது.
கி.மு தொடங்கிய ஆரியரின் வருகையும் அதனைத் தொடர்ந்த இந்துக்களின் வருகையும் இடம்பெற்ற அதே காலத்தில் சர்வதேச கடலோடிகளான அறபிகளுடைய வருகையும் இலங்கையில் நிகழ்ந்திருக்கின்றது. கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாகின்றது. அன்று தொடங்கி இலங்கை மன்னர்களுடன் முஸ்லிம்களுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

இறுதியாக 1815ல் வீழ்ச்சி கண்டி இராசதானியத்தில் முஸ்லிம்கள் கனிசமான பங்கினை வகித்தார்கள் என்பது 2ம் இராஜசிங்க மன்னன் முஸ்லிம்களுக்கு வழங்கிய பரிசில்கள், நன்கொடைகள் என்பவற்றின் மூலம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படக் கூடியதாக அமைகின்றது.

ஒல்லாந்தருடையதும் போர்த்துக்கீசருடையதுமான ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளாவிடினும்; வர்த்தக ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சூழலை அவதானிக்க முடியும். பிர்த்தானியரின் அடிப்படைக் கோட்பாடாகிய (Divide and Rule) பிரித்தாளும் போக்கு இலங்கையிலும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டது. இத்தகைய நடைமுறையால் பாதிப்புக்குள்ளான இலங்கைச் சமூகத்தவருள் முஸ்லிம் சமூகமும் அடங்கும்.

1915ல் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் முஸ்லிம்கள் இலங்கையில் தனியான இனம் என்பதை நிறுவியது. கலவரத்தை அடக்கும் முகமாக சிங்கள சமூகத்தின் முக்கிய தலைவர்களை பிர்த்தானியப் பொலிசார் சிறைப்பிடித்தனர். D.S.சேனாநாயகா, F.R.சேனாநாயகா உட்பட பல தேசியவாதத் தலைவர்கள் சிறைப்பிடிக்கத்தலைப்பட்டனர். அப்போது படித்த இலங்கையர்; சார்பில் தேசியப் பேரவையில் அங்கத்துவம் வகித்த சேர். பொன் இராமநாதன் கடல் மார்க்கமாக பிர்த்தானியா சென்று அங்குள்ள பிரபுக்கள் சபையில் வாதாடி சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்தார். இதனால் சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் அவர் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தும் சிங்களவர்களால் பாரிய வரவேற்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர்இழுத்தனர். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.

இது ஒரு சுமையான வரலாற்றுச் சம்பவம் என்பதை விட இனத்துவத்திற்கான வேர்கள் ஆளவேர்பிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதிநடவடிக்கையேயன்றி வேறில்லை.

உண்மையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்குமான இனத்துவமோதல் என்பதைவிட சிங்கள-தமிழ்-முஸ்லிம்களுக்கான முக்கோணச்சமரின் தொடக்க விழாவே 1915ல் பிர்த்தானியரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்களவர் தரப்பில் மேல்நாட்டுச் சிங்களவர் அல்லது கண்டிச்சிங்களவர் என்றும் கரையோரச் சிங்களவர் என்றும் முஸ்லிம்களில் இலங்கை - இந்திய முஸ்லிம்கள் சோனகர் - மலாயர் என்றும் தமிழர்களில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்றும் மலைநாட்டுத் தமிழர் என்றும் பிரித்தாளும் வடிவங்கள் நீண்டு கொண்டே சென்றன. சேர்.பொன் இராமநாதனுடைய - முஸ்லிம்களும் தமிழர்களே என்ற விவாதத்தை எதிர்த்து A.M.Aஅஸீஸ் முடுக்கிவிட்ட எதிர்வாதங்கள் பொன்னம்பலத்தின் விவாதத்திற்கு ஆப்புவைத்தன.

என்றாலும் முஸ்லிம் தமிழ் உறவில் பொன் இராமநாதன் ஒரு நீங்காத பிரிகோட்டை வரைந்தார் என்றே கொள்ளப்படுகின்றது. 1915 - 1930 வரை சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகளும் 1930 ற்குப் பின்னர் சிங்கள - தமிழ் முரண்பாடாகவும் இலங்கை இனத்துவப் போராட்டத்தில் மூழ்கி இனத்துவ அடையாளத்தையும் வேறுபாட்டையும் ஒரு விதியாகக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்பட்டது. அத்தகைய இனத்துவ அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு சூழல் இன்றுவரை தொடர்கின்றது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கை அரசியலில் முஹம்மதியர்களுக்கான விஷேட தனியார் (திருமண) சட்டங்கள் 1806 ம் ஆண்டுகளில் பிர்த்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 1905 ல் M.C. அப்துல் காதிர் உடைய துருக்கித் தொப்பிப்போராட்டம் தொடங்கி 1915 வரை பொன் இராமநாதனுடைய தமிழர் அடையாளத்திற்கு எதிரான A.M.A.அஸீஸ் உடைய விவாதங்கள் வரை நோக்குமிடத்து பிர்த்தானியர்களை விடவும் சிங்கள - தமிழ் மக்களுடைய ஆதிக்க எண்ணமே மேலோங்கியிருந்தது.

1930 களில் சோனகர் என்றும் மலாய சமூகத்தவர் என்றும் பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூக அரசியல் 1939 ல் கூட்டப்பட்ட அரசியல் மாநாட்டைத் தொடர்ந்து வலுவான முஸ்லிம் அரசியல் என்ற நிலைக்குத் திரும்பியது. சோனகர் சமூகப்பிரதிநிதிகள் ராசிக் பரீத் தலைமையிலும் மலாய் சமூகப் பிரதிநிதிகள் T.B.ஜாயா தலைமையிலும் செயற்பட்டனர். இருப்பனும் பிந்திய காலங்களில் கூட்டாக சமூகப் போராட்டம் தொடக்கப்பட்டது. வர்த்தகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிக மோசமானதாகக் காணப்பட்டது.

1891ன் கணிப்பின் படி படித்த முஸ்லிம் ஆண்கள் 30.5% பெண்கள் 1.5% மாகவுமே காணப்பட்டது. இந்நிலைமை பின்னர் மிகவும் வீழ்ச்சி கண்டது. முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையாய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினை அடையாளப்படுத்தப்பட்டது.

சர்வசன வாக்கெடுப்புக்கு முன்னர் - படித்த, பணம் படைத்தோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் டொனமூர் சீர்திருத்தங்களின் போது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. எனவே முஸ்லிம்களுடைய வாக்காளர் பலம் சர்வசன வாக்குரிமை வழங்கலூடாக சற்றே முன்னேற்றம் கண்டது. இருப்பினும் கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அவதானிக்கப்படவில்லை.

மாற்றமாக முறண்பட்ட கருத்துகளும் தன்மைகளுமே வலுவாகக் காணப்பட்டது. குறிப்பாக கிழக்கிலங்கையில் பெறும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள், தாம் கொண்டிருந்த ஆட்புல எல்லையின் அடிப்படையிலும் தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் கொழும்புத் தலைமைத்துவத்திற்கு அதிக ஈடுபாடு இருப்பதாக உணரவில்லை, காரியப்பர் போன்ற தலைவர்கள் கிழக்கில் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தனர்.

இருப்பினும் பிற்பட்ட காலங்களில் இந்நிலையில் மாற்றங்கள் தோன்றின. கொழும்பு அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு மிகக் கிட்டிய காலத்தில் இலங்கை அரசியலில் தமிழ் - சிங்கள பிரிவினைகள் மேலோங்கத் தொடங்கின. டொனமூர் சீர்திருத்த சபையிடம் ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 திட்டம் S.W.R.D.பண்டார நாயக்கா போன்றோரின் சிங்கள மொழி முன்மொழிவுகள் நிலைமையின் மோசமான தன்மையினை எடுத்துக் காட்டுகின்றன. 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பானது இனத்துவ ரீதியான பிரதிநிதிகளை தேசிய பேரவைக்குத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.

இவ்வாறாக சுதந்திர இலங்கைக்குள் நுழைகின்ற போது இனத்துவ அடயாளங்களை மிகத் தெளிவாக சுமந்து கொண்டே நுழைந்தோம். இங்குதான் தமிழ் - முஸ்லிம்- முஸ்லிம் - சிங்கள இனத்துவ உறவுகளின் தெளிவான தன்மையும் புரிந்துகொள்தல் வேண்டும். அதாவது தமிழ் - முஸ்லிம் உறவில் உள்ள விரிசல் தமிழ் - சிங்கள உறவில் உள்ள விரிசல் இரண்டும் முஸ்லிம்களை வடகிழக்கிற்கு வெளியில் சிங்களவர்களுடன் கூட்டிணைந்து விட்டது.

எனவே அப்போதைய கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் பெறும்பான்மைக் கட்சிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அதேபோன்றே வடகிழக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்தைப் பேண முற்பட்டதையும் அங்கு நிலவிய அரசியல் உறவுகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

செனட்டர் ராசிக் பரீத் தொடங்கி பதியுத்தீன் மஹ்மூத், மாக்கான் மாக்கார், நெய்னாமரிக்கார், எச்.எஸ். ஸ்மாயில் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் பெறும்பான்மை சமூகத்துடன் கூட்டிணைந்த அரசியல் போக்கையே முஸ்லிம்களுடைய அரசியல் போக்காக கருதினர். இது மிக நீண்ட காலம் செல்லுபடியாகும் போக்காக அமையவில்லை முஸ்லிம் அரசியல் வாதிகளின் சில முற்போக்கான செயற்திட்டங்களால் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பண்பாட்டு, அம்சங்களிலும் அரச துறை வேலைவாய்ப்புக்களிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தப் பட்டது.

இருப்பினும் இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் ஒவ்வொரு இனத்துவக் குழுக்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இப்போக்கு அமையவில்லை. பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் குறித்த ஒரு சமூகம் தனது பெறும்பான்மைப் பலத்தைப் பிரயோகித்து சிறுபான்மைகளை அடக்க முயல்வதும், அவர்களது உரிமைகள் விடயத்தில் பொடுபோக்காக செயற்படுவதும் தவிர்க்க முடியாதது.

அத்துடன் அச்சமூகம் தனது மத, கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை ஏனைய மத, கலாசார அம்சங்களை மதிக்காத சூழல் இன்றுவரை பரவலாக உணரப்படுகின்றது. எனவே பல்லின சமூகம் வாழும் நாடொன்றில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் சமமான அதிகாரப் பகிர்வும் ஆட்சி முறைமையும் அவசியப்படுகின்றன. இது இன்று பொதுவாக உலக அரங்கில் ஏற்று நடைமுறைப்படுத்தும் அம்சம். இந்தியா போன்ற நாடுகள் இதற்குத் தக்க முன்னுதாரணமாக இருக்கின்றன.

இலங்கையில் 1978 வரையான காலப்பகுதியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியும், ஐ.தேசியக் கட்சியும் சிறுபான்மைகள் விடயத்தில் மிகவும் கடுமையான போக்கையே கடைபிடித்தனர். அதன் உச்சகட்ட வெளிப்பாடே இன்றைய வன்முறைக் கலாசாரமும் யுத்த சூழலுமாகும். குறிப்பாக முஸ்லிம்களுடைய விடயத்தில் இரண்டு பெரும்பான்மைகளும் தமது சுயஉருவத்தை அவ்வப்போது வெளிக்காட்டியே வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவை வன்முறைகளாக வெடித்தன, ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவை தனிப்பட்ட பழிவாங்கல்களாகவே தொடர்ந்தன.

சோனகர் என்றதும் கல்வி, தொழில்வாய்ப்பு, இதர அரச துறைகள், வைத்தியம், கட்டடநிர்மானம், வர்த்தகம், விவசாயம், காணிப்பகிர்வு என ஏராளமான துறைகளில் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமே வந்துள்ளனர். எனவே இத்தகைய அடக்கு முறைகள் பாரபட்சங்கள் என்பவற்றிற்கு நிரந்தரத் தீர்வு சட்டரீதியான தீர்வாக மட்டுமே அமையும் அன்றி வேறொன்றாக அமையாது. அத்தகைய சட்டரீதியான தீர்வை முன்மொழிவதும் அதற்கான சரியான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்வதும், அத்தீர்வின் நடைமுறை வடிவத்தை உறுதிப்படுத்துவதும், பெறும்பான்மை அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைந்து கொண்டு அரசியல் நடாத்துவதால் எட்டப்படமுடியாததாகும்.

எனவே இத்தகைய நீண்ட பின்புலத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் தனித்த அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டது. இலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் ஒரு புதிய பரிமானத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வடகிழக்கின் தமிழ்ப் பெறும்பான்மைத் தலைவர்கள் இதுவரை காலமும் தம்முல் ஒன்றாக ஒரு பிரிவினர்களாக அடையாளப்படுத்தி அடக்க முற்பட்ட ''தமிழ்ப்போசும் இஸ்லாமியர்கள்" அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் என்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு தனித்துவமான இனத்துவம் என்று பிரகடனப்படுத்தியது.

ஏ.எம்.ஏ அஸீஸ் சேர். பொன் இராமநாதனுடன் தொடக்கிய விவாதத்திற்கு விடையாக எம்.எச்.எம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை நிறுவினார். சிங்கள பெறும்பான்மைக் கட்சியினர் முஸ்லிம் காங்கிரஸின் வரவை தூரத்து சவாலாகவே நினைத்தனர். ஆனால் சிங்கள இனவாத, பௌத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழப்போராட்ட அமைபபுக்களும் ''முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய அமைப்பாக" மு.காவைக் கருதினர். குறிப்பாக வடகிழக்கில் வலுப்பெற்றுவந்த தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை அடக்கியாள முற்பட்டது. தமிழ் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டதைப்போன்று ஆயுதப்போராட்டத்திலும் முஸ்லிம்களை உள் வாங்க முற்பட்டது. ஆனால் தீர்வுகள், கோரிக்கைகள் விடயத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வந்தது. இதனை உணர்ந்தே குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்டது.

தக்பீர் கோஷங்களுடனும், இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் - இஸ்லாமிய அரசியலை நிறுவுவதற்கான நிறுவன அமைப்பாகவுமே முஸ்லிம் காங்கிரஸ் தோன்றியது. இந்த அடிப்படை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை வெகுவாக வரவேற்கப்பட்டது. வலுவான ஆதரவுத்தளங்கள் குறிப்பாக வடகிழக்கிலும் பொதுவாக இலங்கையெங்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்தது. 1989 - 90 வரையான 10 வருடத்தினுள் 11 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அரசின் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி கண்டது என்றால், அது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களின் உழைப்பு என்பதற்கு அப்பால் அவர்கள் முன்வைத்த ''இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட பிரசாரங்களும் முஸ்லிம் சமூகத்திடம் நிலவிய நீண்டகால அரசியல் வெற்றிடமும் என்பதுவே பொறுத்தம்.

1988 - 2000 வரையான 3 பொதுத்தேர்தல்களும் முஸ்லிம் காங்கிரஸின் பெரிமிதமான வளர்ச்சியைக் காட்டும் அதேவேளை 2000 ற்குப்பிந்திய காலம் உடனடி வீழ்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது. முஸ்லிம் சமூக அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் முதல் 2000 ம் ஆண்டு வரையான காலம் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வுகள் நிறைந்த காலமாகும்.

1990 ல் வடக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பும் கிழக்கில் அரங்கேரிய மனித படுகொலைகளும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் நடந்தேறிய மிக மோசமான இனத்துவ அராஜகமாகவே கொள்ளப்படுதல் வேண்டும். 1915 ல் நடந்தேறிய கண்டிக்கலவரம் முஸ்லிம்களின் உடமைகளையும் பொருளாதாரத்தளங்களையும் மையப்படுத்தியதாகவே அமைந்தது. அவர்களது இருப்பு குறித்து எவ்வித அச்சப்பாடும் தோன்றியிருக்கவில்லை. அது சிங்கள இனத்துவத்தின் மேலாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு.

அதற்கு தமிழ்த் தலைவர்களும் பக்க வாத்தியம் வாசித்தனர். ஆனால் 1990 ல் வடகிழக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பும் - மனிதப்படுகொலைகளும் தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களின் இருப்பை பூண்டோடு அழிக்க, வன்முறைக் கலாசாரத்தைப் பயன்படுத்திய வடிவைக் காண்கின்றோம் . எனவே இரு பெறும்பேரினவாதங்களுக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகம் தனது தெரிவாக முஸ்லிம் காங்கிரஸை தெரிவுசெய்து கொண்டது. தென்னிலங்கையில் பெறும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளால் அடையமுடியாத பேரம் பேசும் பலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப்பெற்றது.

இதற்கு எதிராக பெறும்பான்மை சமூகங்கள் தமது திட்டமிட்ட செயற்பாடுகளை தொடக்கிவிட்டன. பொதுவான முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும் போக்கில் பெறும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் அரசியல் வாதிகளை பெறும்பான்மை வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத கட்சிகள் இனத்துவேசத்துடன் சிங்கள இனவாத வாக்குகளை சேகரிக்கத் தொடங்கினர். குறிப்பாக JVP - JHU போன்ற கட்சிகள் இனத்துவேச கோசங்களை முன்வைத்தன. அதைவிட மேலான முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப ;பூசலை வலுவாக்கி கட்சிப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன.

தமிப்பேரினவாத தீவிரவாதிகள் ஆயுதமுனையில் முஸ்லிம் காங்கிரஸை ஒழித்துக் கட்ட முயற்சித்தனர். இத்தகைய இக்கட்டான சூழல் முஸ்லிம்காங்கிரஸின் இருப்பையும் செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தின. முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அரசியல் நகர்வாக கருதப்பட்ட தேசிய ஐக்கிய முன்னனி (NUA) முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஒழுங்கின் சிறப்பான வடிவமாக கருதப்பட்டது. இருப்பினும் வன்முறையாளர்களின் வெடிகுண்டு - மு.கா தலைவர்களின் மூச்சை நிறுத்தியது.

பெறும்பான்மைக் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களுக்கான வேலைத்திட்டம் கட்சியின் மூச்சை நிறுத்தியது. சிங்கள இனவாதக் கோஷங்களும் அதற்கு ஆதரவாக எழுந்த அலைகளும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கை நிலை தடுமாற வைத்தது. இதுவே 2000 ம் ஆண்டு வரையான முஸ்;லிம் அரசியலின் வரலாறாக அமைந்துவிட்டது.

இனவாத சிந்தனைப் படையெடுப்பில் தொடக்கப்பட்ட இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியலும் நிர்ப்பந்தமாக இனவாதத்துள் இழக்கப்பட்டது. 1915 - 2000 ஆண்டு முஸ்லிம் அரசியலில் மத்தளமாக இரு பேரினவாதங்களினாலும் மாறி மாறி அடிபட்டுக் கொண்டே வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் தமக்கான அரசியல் ஒழுங்கை தனித்துவமாக சிந்திக்க சுதந்திரம் பெற்றதன் பின்னர் 40 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இஸ்லாமிய அரசியலின் சரியான வடிவத்தினுள் முஸ்லிம் சமூகம் இன்றுவரை நகரவில்லை என்ற கசப்பான உண்மை இங்கு உணர்த்தப்பட வேண்டும்.

ஆனால் மிகவிரைவில் முஸ்லிம் அரசியல் சீர்படுத்தப்பட வேண்டிய தேவை பலராலும் உணரப்படுகின்றது.


இன்று 2000 ற்குப் பின்னர்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் படுகொலையைத் தொடர்ந்து மு.காவினுள் தோன்றிய பிளவுகளும், முஸ்லிம் சமூகத்தில் முளைத்துவிட்ட அரசியல் கட்சிகளும், பெரும்பான்மை (UNP- PA) கட்சிகளும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளும் (JVP) முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வது, அமைச்சுப் பதவிகள் தருவது, முக்கிய மேடைகளில் ஏற்றுவது இன்றைய எமது அரசியல் வற்லாராக பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் உரிமைகள், கோரிக்கைகள், அரசியல் இலக்கு என எல்லாமே இழக்கப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் இத்தகைய சோடிப்புக்களை பொதுவாக அவதானிக்க முடியும். முஸ்லிம்கள் அரசியல் தலைவர்கள், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல, சொத்தும், சுகமும் அனுபவிப்புக்களும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருந்ததில்லை. இவை அனைத்தும் அவர்களது அரசியல் வரவுக்கு முன்னர் ஆனால் அரசியல் பிரவேசத்தின் பின்னர் மரணம்வரை அமைச்சுப் பொறுப்பும், சொத்தும்,சுகமும் இலக்குகளாக மாறிப்போகும் நிலையே இன்றைய முஸ்லிம் அரசியலின் இலட்சினை.

சிங்கள பேரினவாதம் ஒருபுறம் தமிழ்த் தீவிரவாதம் மறுபுறமாக முஸ்லிம் சமூகத்தைத் தாக்கியழிக்கும் நேரத்திலும் முஸ்லிம் அரசியலின் அறிக்கை அரசியலில் மாற்றமில்லை. சில நிகழ்வுகளைக் குறித்துப் பேசுவதை விடவும் பொதுவாக எடுத்து நோக்கினால்.

  • தென்னிலங்கையின் இனவாத வன்முறைகள் - இனத்துவேச முயற்சிகள்.
  • வடகிழக்கில் தீவிரவாதத்தின் அடாவடித்தனங்கள் படுகொலைகள் - இனச்சுத்திகரிப்புக்கள்.
  • சுனாமி அனர்த்த நிவாரணத்தில் காட்டப்படும் பாரபட்சங்கள்.
  • நில அபகரிப்புக்கள் - வர்த்தக, பொருளாதார முடக்கங்கள்.
  • இனப்பிரச்சினைத்தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் திட்டமிட்ட புறக்கணிப்புகள்.

என முஸ்லிம் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் தொடரும் அதேவேளை - முஸ்லிம் அரசியல் இவற்றுக்குத் தரும் தீர்வுகள் எதுவும் காத்திரமாக அமைவதாகத் தெரிவதில்லை. இவை நிகழ்கால் யதார்த்தங்கள்.

சிவில் சமூக அரசியல் முன்னை விட சற்று முனைப்புடன் செயற்படுவதாகத் தென்படுகின்ற பொழுதும் அதன் வகிபாகம் எந்தளவுக்கு முஸ்லிம் அரசியலில் தாக்கமுடையதாக இருக்கின்றது. என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே தொடர்கின்றது. MCSL - முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் சிவில் சமூகம் சார்பாக காத்திரமான நகர்வுகளை மேற்கொண்ட பொழுதும் அதனால் முஸ்லிம் அரசியலை நேரான பாதைக்குக் கொண்டுவர முடியும், என்று கூறமுடியாது.

அதற்கு நியாயமான பல காரணிகள் எமது சமூகத்தில் இன்னும் நிலவுகின்றன. ஆனாலும் குறிப்பாக இப்பிரச்சினை விவாகரத்தில் முஸ்லிம் கவுன்சில் காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்க போதுமானது.

பொதுவாக இலங்கையின் அரசியலின் தற்போதைய ஸ்திரமற்ற தன்மையும், இனப்பிரச்சினையின் பல்பட்ட தன்மையும் முஸ்லிம்களின் அரசியல் குறித்த அவதானத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. ஆனால் முஸ்லிம்களின் அரசியல் சார்ந்த மிகச்சரியான நிலைப்பாடுகளை பலமாக வெளிப்படுத்த வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய இலக்கற்ற அரசியல் போக்கானது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.

நாளை

இதே நிலையில் முஸ்லிம் அரசியல் தொடருவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக அமையாது. தற்போதைய முஸ்லிம் கட்சிமுறைமைகளும் சந்தர்ப்பவாத அரசியலும் நாளடைவில் முஸ்லிம் சமூகத்தால் புறக்கணிக்கப்படும். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவை எவ்வளவு யதார்த்தமானதோ அதே போன்று அத்தேவை இஸ்லாமிய அடிப்படைகளில் நின்றே நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் யதார்த்தமானது.

இதனையே முஸ்லிம் காங்கிரஸின் வரவும் அது சுமந்து வந்த ''இஸ்லாமிய அரசியல்" பிரச்சாரமும் அதற்கு தோள்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுத்தளமும் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் அதன் மார்க்கத்தின் பால் கொண்டுள்ள அபரிமிதமான பற்றும் இதற்குக் காரணமாகும். எனவே முஸ்லிம் சமூகத்தின் நாளைய அரசியல் இஸ்லாத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இலகுவாக மேற்கொள்ளும் அரசியலாக அமையாது.

இலங்கை போன்ற அனைத்து வளங்களும் நிறைவாகக் கொண்ட தேசமொன்றை இனவாதம் என்ற குறுகிய சிந்தனையால் சூறையாடும் பெறும்பான்மை அரசியல் வாதிகளாயினும் சிறுபான்மை அரசியல், தீவிரவாத சக்திகளாயினும், அந்நிய ஆதிக்கங்களாயினும் இலங்கையின் பொதுநலன், தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் சக்தியால் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே அத்தகைய பலம் பொருந்திய சக்தியின் பிரதான கர்த்தாவாகவோ அல்லது சாதாரண பங்காளியாகவோ முஸ்லிம் சமூகம் தன்னை அமைத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் புறையோடிப்போயுள்ள பல நூற்றாண்டுகள் பலமை பொருந்திய இனத்துவப் போக்கை உடைத்தெறிய முடியாவிடினும் அதனால் தேசிய அபிவிருத்திக்கும் பொதுநலன்களுக்கும் ஏற்படும் பாதகங்களையாவது தடுத்து நிறுத்தமுடியும் இதுவே முஸ்லிம்களின் நாளைய அரசியல் அமைப்பாக இருத்தல் அவசியமாகும்.

எமது இளைஞர்கள், எமது சந்ததிகள், எமது மார்க்கம் என எல்லாவற்றின் நலன் குறித்தும் மிகப் பொதுவாக பரந்தளவில் சிந்திக்கும் எவரும் இத்தகைய முடிவை நோக்கி வருவதே மிகப் பொறுத்தமானதும் முற்போக்கானதுமாகும்.

முற்றும்

Thursday, December 13, 2007

முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் எதிர்கட்சி ஆசனத்தில



முஸ்லிம் காங்கிரஸ் மீண்டுமொருதடவை தான் 28-01-2007 முதல் தற்போதய UPFA அரசுக்கு வழங்கிய ஆதரவை இடைநிறுத்தி மீண்டும் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளது, ஆதரவு வழங்கும் போதிருந்த 6 ஆசனக்களுள் 4 மட்டுமே மீண்டு வந்துள்ளன,
தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைஸல் காசிம் ஆகியோரே எதிர்கட்சிக்குத்தாவியுள்ளனர் தேசிய அமைப்பாளர் பாயிஸ் மற்றும் நிஸாமுதீன் ஆகியோர் இன்னமும் அரசுபக்கமே இருக்கின்றனர், வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது இத்தகய ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதால் இது பலவித எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது,அத்துடன் இது குறித்து மு.க தலைவர் விடுத்துள்ள அறிக்கையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களும் எமது கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன,

"எமது பெருத்தலைவர் அஷ்ரப் எப்போதும் கூறுவார், நிகழ்வுகளை நாமே ஏற்படுத்த வேண்டும், மாற்றங்களை நாமே உருவாக்க வேண்டும், இப்போது தேசியப்பிரச்சினைகளில் ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது, முஸ்லிம்களுடைய பிரச்சினை கையாளப்படுவதில் மாத்திரம் அல்ல தமிழ உரிமைப்பிரச்சினையும் கையாளப்படுவதில் ஒரு புதிய அனுகுமுறை வேண்டப்படுகின்றது"
வடக்கு கிழக்க்கு முஸ்லிம்களுடைய பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை பாதுகாப்பு, பொருளாதார விடயங்கள் குறித்த பிரச்சினைகள் தொடருகின்றன,எமது அடிப்படை உரிமைகள் மற்றும் எமது மார்க்கத்தைப்பின்பற்றும் சுத்ந்திரம் என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன,அரசு எமது நிலங்களை சூரையாடி மீள்குடியேற்றங்களை அமைப்பதனூடாக நிலைமைகளை மாற்றியமைக்கப்பார்க்கின்றது,
மிகுந்த கௌரவத்துடனே நாம் அரசில் இருந்து வெளியே வருகின்றேம், எமது மக்கள் எமக்களித்த மக்களாணையின் பிரகாரமே எமது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது,

இவ்வாறாக ரவூப் ஹக்கீம் தனது செய்தியாளர் மாநாட்டு உரையின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார், பெருந்தலைவரின் வாசகங்களை கோடிட்டுக்காட்டுவது ஒன்றும் புதிய விடயமல்ல, ஆனால் அஷ்ரப் அவர்களைப்போன்று நிலைமைகளை ஏற்படுத்தும் திறன் ஹக்கீமிடம் குறைவாகவே உள்ளது அரசிலிருந்து வெளியில் வந்தால் அரசு அடுத்த நிமிடம் பெரும்பான்மையை இழக்கவேண்டும் ஆனால் இம்முறை அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன,அத்துடன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை அரசுடன் ஒட்டிகொண்டிருக்க விட்டுவிட்டு வருவதும் தலைமைத்துவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தப்போதுமானதாகும். அத்துடன் ஹக்கீம் தெரிவித்துள்ள பிரச்சினைகள் எதுவுமே இன்றைய புதிய பிரச்சினைகள் அல்ல அவை காலாகாலமாக இருக்கும் பிரச்சினைகள, மு.கா அரசில் இணைவதற்கு முன்னமும் அத்த்கைய பிரச்சினைகள் இருந்தன, அப்போதெல்லாம் இத்குறித்த மு.கா வின அறிக்கை அரசியலே நடத்தப்பட்டது இப்போது புதிதாக அவற்றுக்காகவும் அரசில் இருந்து வெளியேறுகின்றோம் என காரணம் கற்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கின் காணிப்பிரச்சினை, மற்றும் மத உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் முதன்மைப்படுத்தப்படுகின்றன,


தேசத்துரோகிகள்

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட முதற்கட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தபோது கிடைத்த தேசப்பற்றாளர் பட்டம், அர்சிலிருந்து வெளியேறுகின்ற போது தேசத்துரோகமாக மாற்றப்படுவது வருத்தமாக இருக்கின்றது, மற்றும் சிங்கள பிக்கு ஒருவர் முஸ்லிம்கள மீண்டும் சவுதிக்கே செல்லவேண்டும் என்று கூறிய இனவாதக்கருத்துக்களும் எமது விலகலின் பின் புலத்தில் இருப்பதாக ஹக்கீம் தெரிவிக்கின்றார் அத்துடன் அரசுனுள் நிகழும் உள்ளக முரன்பாடுகள் ஓழுங்கீனம் என்பனவும் அவரது காரணப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன,


முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றம் திருப்த்திப்படுவதாய் அமைகின்றபோதும், அதற்காக் சொல்லப்பட்ட காரணிகளும், அது நிகழ்ந்த வித்ம் மற்றும் நேரம் என்பன சற்று சிந்திக்க வைக்கின்றது. மகிந்தவின் அரசு முன்னைய நிரைவேற்றதிகார ஜனாதிபதிகளை விடவும், தமது அதிகாரத்தை மிககூடுதலாக துஷ்பிரயோகம் செய்வதாகவே தெரிகின்றது, அத்துடன் யுத்தம் மூலம் தீர்வினைக்கான்பதிலும், தனது ஆய்த பலத்தின் மூலம் ஊடக சுத்ந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகள், மத உரிமை, பொருளாதார நடத்தைகள் என எல்லவற்றையும் மட்டுப்படுத்தும் ஒருவித சர்வாதிகார ஆடிசிமுறை அமுல் படுத்தப்படுவதாகவே நாம் உணருகின்றேம், எனவே இத்தகைய கட்டத்தில் மு.கா வின் இந்த முடிவானது வரவேற்கப்பட வேண்டியதே.
எனினும் அது தோற்றுவிக்கப்போகும் விளைவுகள் குறித்த ஒருவித ஐயப்பாடு தொடர்ந்தும் நிலவுகின்றது....

  • பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையினை இது பாதிக்காது
  • முஸ்லிம் காங்கிரஸினுள் மேலும் உற்கட்சி மோதலை வலுப்படுத்தும்
  • அரசின் அழுத்தங்களை முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்க இது காரணியாகக் கொள்ளப்படும்
  • கிழக்கில் த.ம.வி.பு கள் அமைப்பின் அடாவடித்தனங்கள் எல்லை மீறும்

போன்ற ஒருசில குறிப்புகளை இங்கு பதிய முடியுமாக உள்ளது
அ.அஸ்மின்

Monday, November 26, 2007

இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றுச்சக்தியின் அவசியம்- (பாகம் 01)














இலங்கை முஸ்லிம் அரசியல் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டது, அங்கு பல்வேறு சிந்தனைகள்,கருத்துகள்,கட்சிகள்,ஆளுமைகள்,தனிமனிதர்கள் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அவ்ர்கள் ஒவ்வொருவரும் ஏற்படுத்திச்சென்ற தாக்கங்கள் எமது அரசியலில் இன்றும் இருக்கின்றன, இந்நிலையில் பல்லின சமூகசூழல் ஒன்றில் வாழும் எம்மைப்போன்ற ஒரு சமூகம் தனது அரசியல் நடந்தையில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவையுடையதாக இருக்கின்றது.பலகருத்துகளும் அரசியல் நடத்தைகளும் ஒருபக்கம், அரசியலில் வினைத்திறனான செயற்பாட்டின் தேவை மருபக்கம்; எனவே இத்தகைய இரு நிலைகளையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, நாம் எமது அரசியல் குறித்த ஒரு மீளாய்வின் பால் தேவையுடையவர்களாக இருப்பதாகவே எமக்குத்தோன்றுகின்றது.

பொதுவாக மேற்படி அம்சம் எம்மை பல வழிகளில் சிந்திக்கச் செய்கின்றது. பெருமான்மை சமூகங்களுடன் ஒன்றித்துப்போன அரசியல் நடைமுறையிலிருந்து மிகுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகள், சதிமுயற்சிகள் என்பவற்றைக்கடந்து தனித்துவ சமூகமாக இனத்துவமாக அரசியலில் தடம் பதித்து: உரிய இலக்கை அடைவதற்கு முன்னமே துண்டுதுண்டாய் சிதறிப்போய் நாட்டுக்கு ஒரு கட்சி என்ற நிலைமாறி ஊருக்கொரு கட்சி அல்லது ஒவ்வொரு மாற்றுக்கருத்துக்கும் ஒரு கட்சி என்ற நிலை தோன்றிவிட்ட சூழலில் நாம் மேற்படி விடயம் குறித்து ஆராய்கின்றோம்.

இஸ்லாத்தின கருத்துசார்ந்த வளர்ச்சியில் எமதுசமூகம் முதிர்ச்சியடையாவிட்டாலும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவித பக்குவநிலை இன்னும் ஏற்படவில்லை என்றுதான் நான் கருதுகின்றேன், குறிப்பாக மார்க்கத்தையும் அரசியலையும் சேர்த்து நோக்கும் உன்னத நிலை எட்டப்படாத ஒரு சமூக அமைப்பில் நாம் மாற்று அரசியல் குறித்து கருத்துப்பறிமாற்றம் செய்கின்றேம். இந்த ஆரம்ப அறிமுகத்துடன் எமது மாற்று அரசியல் குறித்த கருத்துப்பரிமாற்றம் பின்வரும் முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என நான் கருதுகின்றேன்

01- தற்போதைய அரசியல் நடத்தைகளூடாக முன்வைக்கப்படும் மாற்றுக்கருத்துகள்
02-முஸ்லிம் அரசியல் வரலாறு எமக்கு முன்வைக்கும் அனுபவப்பாடங்கள்
03- இஸ்லாமிய அரசியல் அடிப்படைகளும் சமகால முஸ்லிம் உலக அரசியலும்
04- மாற்றுக்கருத்தின் நடைமுறை வடிவம்
என்பனவே அத்தகைய முக்கிய பகுதிகளாகும்


இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியல் கருத்து, சக்தி என்பதற்கான தேவையானது: தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் கருத்து, சக்தி என்பவற்றின் குறைபாடுகள், போதாத்தன்மை என்பவற்றின் காரணமாக மட்டும் எழுந்த ஒன்று அல்ல: மாற்றமாக முஸ்லிம் அரசியல் என்ற சுலோகத்துடன் சாக்கடை அரசியல் நடைபெறும் சூழலில் மிகவும் சரியான முஸ்லிம் அரசியல் கருத்தும் சக்தியும் தூரத்தே வீசப்பட்டுள்ளது. அதனை மிகச்சரியான வடிவில் எடுத்தாள்வதற்கான முயற்சியே முஸ்லிம் அரசியலில் மாற்றுக்கருத்தும் சக்தியும் என்ற தோற்றப்பாட்டின் நோக்கமாகும்.

இதனை முன்னிருத்திகின்ற போது சமகால முஸ்லிம் அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் அவசியப்படுகின்றன. சமகால அரசியல் நடத்தைகளின் பால் மக்களின் நிலைப்பாடும் நம்பிக்கையும் எத்தகையது என ஆராய்தல் எமது இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்.

இஸ்லாமிய அரசியல் என்பதற்கும் முஸ்லிம் அரசியல் என்பதற்கும் இடையே மிகப்பாரிய வேறுபாடு இருக்கின்றது. இலங்கையில் இஸ்லாமிய அரசியல் என்பது இனத்துவம் சார்ந்ததோ, பிரதேசம் சார்ந்ததோ அல்ல என்பதும் அது மனிதம் சார்ந்ததும், மக்களின் நலன் சார்ந்ததுமாகும் என்பதும் அழுத்திச் சொல்லப்பட வேண்டியவை.

முஸ்லிம் சமூக நலன் முதன்மைப் படுத்தப்படுவதைவிடவும் மனித நலன் முதன்மைப்படுத்தப்படுவதே இஸ்லாமிய அரசியலின் அடிப்படை நாதமாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கை போன்ற இனத்துவ சிந்தனையின் அடிப்படையில் அமைந்த தேசத்தில் முஸ்லிம்களின் அரசியல் தனித்த பங்குபற்றுதலுடன் இருக்கும் அதே வேளை உண்மையான இஸ்லாமிய அரசியலின் அடிப்படைக்கருத்துக்களை விட்டும் விலகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இஸ்லாம் அதற்கே உரித்தான ஒரு அரசியல் ஒழுங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அது அல்லாஹ்வே ஆட்சிக்குரியவன் என்றும் மனிதர்கள் அவனின் பிரதிநிதி என்றும் மனிதர்கள் ஆட்சியாளர்கள் அல்ல அல்லாஹ்வின் கட்டளையை நடைமுறைப்படுத்தும் அவனது அடிமைகள் என்றும், உலகத்தில் அல்லாஹ்வின் பிரதிநிதி என்றும் அழுத்தமாகக் கூறுகின்றது. அல்லாஹ்வின் கட்டளையை நடைமுறைப்படுத்தும வாழ்வை ஒழுங்கமைப்பதற்காகவே தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்ற கருத்தையும் கொண்டுள்ளது.

இஸ்லாத்தின் அத்தகைய உயரிய இலக்கின் அடிப்படையில் அமையப்பெற்ற அரசியல் ஒழுங்கைப் போன்றே – சமகால சமூக வளர்ச்சி கருதிய தற்காலிக அரசியல் ஒழுங்கும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் அத்தியாவசியமானது. இது விடயத்தில் இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மைகள் பற்றி பிரிதொரு அத்தியாத்தில் விரிவாகக் காண்போம்.

இத்தகைய மிக அடிப்படையான கருத்துப்பரிமாற்றங்களுடன் இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றுச் சக்தியொன்றிற்கான தேவை குறித்த வாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏன் முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் சக்தி குறித்து கலந்துரையாட வேண்டும், உண்மையில் அத்தகைய தேவை எம்மிடம் இருக்கின்றதா என்ற வினாவிற்கு விடை காண்பது இந்த அத்தியாத்தின் நோக்கமாகும்.

இலங்கைத் தேசத்தில் முஸ்லிம்கள் தனித்துவமான அரசியல் ஒழுங்கை நாடவேண்டுமா என்ற விவாதம் தற்போதைக்கு அவசியப்படாத அளவிற்கு காலாவதியாகிவிட்டது. இருப்பினும் சுதந்திரத்தை தொடர்ந்துவந்த காலப்பகுதியில் ''இலங்கையர்|| என்ற ஒருமை அடையாளத்தை விடவும் இனத்துவம் சார்ந்த அடையாளம் முதன்மை பெறுகின்றது. பொதுவாக இத்ததைகய இனத்துவ அடையாளம் இருக்கின்ற சூழ்நிலையில் எமது அடையாளத்தை இழந்து மாற்று இனங்களுடன் நல்லெண்ணத்துடன் நடக்க முற்படுவதும் அவர்களிடமிருந்து நல்லெண்ணத்தை எதிர்பார்ப்பதும் தங்கப்பாத்திரத்தில் பிச்சை எடுப்பதற்கு ஒப்பானது.

பெரும்பான்மைகளுடன் ஒன்றித்துப்போய் அவர்களுடன் ஒன்றறக் கலந்து அரசியல் செய்வதை விடவும் தனியான சக்தியாக அரசியலில் பங்கெடுத்து கௌரவமான அந்தஸ்துடன் அவர்களுடன் தேசத்தின் அபிவிருத்திக்கும் நலனுக்கும் ஒத்துழைப்புடன் செயற்படமுடியும் என்பது இற்றைவரையான அனுபவப்பாடம். எனவே இங்கு முஸ்லிம்கள் தனித்து அரசியல் செய்ய வேண்டும் என்பதில் பெரும்பாலான முஸ்லிம்கள் உடன்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

அதாவது முஸ்லிம் காங்கிரஸ் உட்பட இன்னும் பல முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இருக்கின்ற சூழலில் முஸ்லிம்களுக்கென்ற தனியான மாற்று அரசியல் கருத்தும் கட்சியும் அவசியமானதுவா: இங்கு மிக நிதானமாக எமது கருத்துப் பரிமாற்றங்களை நகர்த்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை ஒரு தனியான அலகாகவும் இதர முஸ்லிம் கட்சிகளை தனியான அலகாகவும் நோக்குவது பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் சமூகம் குறித்து உடன்பாடானதும், முரண்பாடானதுமான கருத்துகளை தம்வசம் கொண்டுள்ளன, எனவே அவற்றின் கருத்துகளுக்கு மதிப்பளித்தும், நாம் எடுத்துக்கொண்ட கருப்பொருளின் தேவைகருதி ஒருசில எடுகோள்களுக்காக ஒரு சில கட்சிகளின் நடத்தைகளை இங்கு குறிப்பிடுகின்றேன், அவை மிகப்பொதுவானதாகவே நோக்கப்படல் வேண்டும்.


முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் தோற்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுக தாக்கம் இருப்பதை அவதானிக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தமது அரசியல் நடத்தைக்கான தேவை கருதி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளாக தம்மை நிலை நிருத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளைத் தொடங்கினர். தேசிய முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரப் காங்கிரஸ், முஸ்லிம் ஐக்கிய முன்னணி, ஆருNயு, ருஆஆயு, னுருயு, உலமா கட்சி என்பன போன்ற சமகாலப் கட்சிகளும் முஸ்லிம் கட்சி போன்ற சற்று காலத்தால் முந்திய கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுக தாக்கத்திற்கு உட்பட்டனவே..

அவற்றின் தலைமைகள் தாம் கட்சி தொடங்கியதன் நோக்கம்: முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டம், அபிவிருத்தி என்றும் முஸ்லிம் காங்கிரஸின் சமூகத்துரோகமும்தான் நாம் கட்சி தொடங்க காரணம் என்று, PழுஐNவு 04 - அதற்கான நியாயமான காரணம் முஸ்லிம் சமூகத்தால் மிகவும் எளிதாக உணரப்பட்டேயுள்ளது. அதன் வெளிப்பாடகவே அக்கட்சிகள் தனித்து அரசியல் களம் இறங்குவதற்கு மறுப்பதும் பெரும்பான்மைக் கட்சிகளின் குடைக்குள் அடைக்களம் தேடுவதும் அமைச்சுப்பொருப்புக்களை முன்னிருத்தி பேரம் பேசுவதும் அமைந்துவிட்டுள்ளது. மிக நீண்ட விவாதத்திற்கு உட்படுத்த முன்னமே அத்தகைய அரசியல் வாதிகளின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்தே இருக்கின்றது.

இருப்பினும் கூட ஒரு சில அவதானங்களை இங்கு முன்வைக்க முடியும்.
சிறு முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அத்தகைய கட்சிகள் முதன்மைப்படுத்திய அம்சங்களும். அவற்றின் பலவீனமான பக்கங்களும்

'சில பல காரணங்களுக்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர், அல்லது வெளியேருவர். அவசரமாகக் கூடி தமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்கு அவரசப் பாதுகாப்புத்தேடுவர், ஏதாவது பெரும்பான்மைக் கட்சியுடன் உடன்பாடு கண்டுகொள்வர் அல்லது ஏலவே எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வெளியேருவர்

கட்சியைப் பதிவர், அறிக்கை விடுவர், வசை பாடுவர் சிலபோது சில அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவர். இத்தகைய நடவடிக்கைகள் மக்களைப் பொறுத்தவரையில் பழகிப்போன அம்சமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி அத்தகைய கட்சிகளும் - அதன் தலைவர்களும் முஸ்லிம்களின் உரிமைப்போராட்ட விடயத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன்வைப்பதும், வாய்ச்சவாடல்களை வெளியிடுவதும் மிகப்பொதுவாக மக்களால் அவதானிக்கப்பட்ட அம்சங்களாகும்.

குறிப்பிட்ட ஒரு தனிநபரின் அல்லது குழுவின் நன்மைகள், நலன்களும் முதன்மைப்படுத்தப்படுவதும் கட்சியின் அரசியல் இயக்கத்தின் நலன்கள் புறந்தள்ளப்படுவதும் இத்தகைய சிறு முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கு எடுபடாமல் போனமைக்கான காரணிகளுள்; ஒன்றாகும். அப்படிச் சிந்திருந்தால் தலைமைத்துவத்துடனும் கட்சி உயர் பீடத்துடனும் ஏற்பட்ட முறுகல்கள் அமைச்சுப் பொறுப்புக்களை நோக்கி அவ்வளவு அவசரமாக அவர்களை அடித்துச் செல்லாது கட்சியின் மீதும் முஸ்லிம் சமூக அரசியல் மீதும் கொண்ட பற்றுறுதி மாற்றுக்கருத்தொன்றை மிகச்சக்தி வாய்ந்ததாக தோற்றுவித்திருக்கும் அல்லது தான்தோன்றித்தனமான தலைமைத்துவத்தை துடைத்தெறிந்திருக்கும்.

குறிப்பிட்ட ஒரு பிரதேசம் சார்ந்த அல்லது தேர்தல் மாவட்டம் சார்ந்த செல்வாக்கும் தேசிய ரீதியிலான செல்வாக்கற்ற தன்மைகளும் அத்தகைய கட்சிகளின் யதார்த்தமான பின்னடைவுகளுக்குக் காரணம் எனலாம்.

பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்துவிட்டு அவர்களது நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாதிருத்தல் - இத்தகைய சிறு கட்சிகளின் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கு காரணம் எனலாம். அதாவது மிகக்கிட்டிய காலத்து நிகழ்வான பொத்துவில் படுகொலை சம்பவத்தின் போது அதே பிரதேசத்திலிருந்து பாரளுமன்றம் சென்றவர்கிளின் நடவடிக்கைகளும் மாவனல்லை பிரச்சினையின் போது அதே பிரதேசத்திலிருந்து பெரும்பான்மை வாக்குகளை பெறாத முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டுக்கிமிடையேயான வித்தியாசத்தை விளங்கிக்கொள்ளமுடியுமாக இருந்தால் - இத்தகைய சிறுகட்சிகளின் பலம் குறி;த்து உணர முடியும்.

மாவனல்லை இனக்கலவரத்தின் (2001) போது முஸ்லிம் காங்கிரஸ் சக அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவந்ததும் அரசிலிருந்து வெளியேரும் அளவிற்கு பிரச்சினை தீவிரப்படுத்தியும் முஸ்லிம்களின் நலன்குறித்து செயற்பட்ட அதேவேளை – பொத்துவில் விவசாயிகள் படுகொலை (2006) சம்பவத்தின் போது அங்குள்ள மக்களின் கருத்து நிலைமைகளையும் மீறி அரசிற்கு சாதகமான சாட்சியங்களைத் திரட்டுவதில் காட்டப்பட்ட அக்கறையும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறித்த சிறு கட்சிகள் கொண்டுள்ள அக்கறையைத் தெளிவாகக் காட்டும்

பெருமான்மைக் கட்சிகளுடன் இரண்டரக்கலந்து அக்கட்சிகளின் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் அமைச்சுப் பொறுப்புக்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கும் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் குறித்து கோஷமெழுப்பி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் ஆர்வலர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட இத்தகைய கட்சிகளின் சொந்தக்காரர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கின்றது. முன்னையவர்கள் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் மட்டும் சென்றனர் அவர்கள் இருவரும் முஸ்லிம் சமூகத்தின்; தனித்துவ அரசியல் செய்பவர்கள் அல்ல அப்படி அவர்களால் முடிந்திருந்தால் பெரும்பான்மைக் கட்சிகளின் குடைகளுடன் தேர்தல் களத்திற்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதுமல்ல எப்போதும் அவர்கள் தனித்து வரப்போவதில்லை.

இப்படியாக சிறிய கட்சிகள் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் பலமான மாற்றுக் கருத்தொன்றின்பாலும் மாற்று அரசியல் நிறுவனத்தின்பாலும் உள்ள தேவை குறித்த கருத்துப் பறிமாற்றத்தில் - எம் முன்னால் எழுகின்ற அடுத்த அம்சம் முஸ்லிம் காங்கிரசும் அதன் இருப்பும் உள்ள சூழலில் முஸ்லிம்களுக்கென்ற மாற்று அரசியல் ஒழுங்கின் தேவை எத்தகையது என்பதாகும்.

இலங்கையில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிசமைத்தது முஸ்லிம் காங்கரஸ்தான் - என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து நிலவ முடியாது. ஆதன் ஆரம்பமும் அதன் ஸ்தாபகத்தலைவரும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாத நெருக்கம் கொண்டவை – அஷ்ரபுடைய ஆளுமையும் மிகவேகமான நுனுக்கமான முடிவுகளும் இலட்சியத்தலைமைத்துவமும் முஸ்லிம் காங்கிரஸின் பலம். ஆனால் அந்த தலைமைத்துவம்தான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் பலவீன்த்திற்கும் காரணம் என்பதில் பலருக்கு உடன்பாடு இருக்காது.

ஒரு கட்சியின் யாப்பும், நெறிமுறைகளும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் அசாதாரண சூழ்நிலைகளின் போது வேகமான நகர்வுகளுக்கும் தடையாக இருக்கக்கூடாது என்ற விதியில் அஷ்ரப் அசையாத நம்பிக்கை கொண்டவர். அந்த விதிக்கும் ஸ்தாபகத் தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆனால் அந்த ஸ்தாபத் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் தலைமைத்துவம் குறித்த விதியைக் கையாளுகின்ற பொழுது எழுகின்ற சமதரப்பு நிலைமைகள் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை. எனவேதான் முன்னைய பெருந்தலைவரின் தலைமைத்தவம் காண்பித்த வழிகாட்டல் பின்னைய தலைமைத்துவத்தால் முன்னெடுக்கப்பட முடியாது போனது. எனவேதான் கட்சி பிளவுபடவும், கட்சிக்குள் மூன்றாம் தரமானவர்கள் நுழைவதற்கும் ஏன் தலைமைத்துவத்தின் மீது சேறு பூசவும் இறுதியில் தலைமைத்துவத்தை கலங்க வைத்து கட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலைமை தோன்றவும் காரணம் என்பது பொதுவான அபிப்பிராயம். இது ஒன்றும் இரண்டு நிமிடங்களில் நிகழ்ந்தேறிவிடவில்லை. சிறுகச் சிறுக வளர்ந்து வந்த புற்று நோய் அது. கட்சியின் யாப்பு: அதன் ஒரு சில விஷேட அம்சங்கள் இத்தகயவர்களை வளர்த்துவிட்டது என்றும் கூறலாம்.

எனவே முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் 1990களில் தேவைப்பட்ட அதிரடித் தலைமைத்துவத்தின் தேவை இப்போது இல்லை. ஆனாலும் அதனையொத்த தலைமைத்துவ மாதிரியை அமுல் செய்வதில் தற்போதைய தலைமைய காட்டும் அக்கறை முஸ்லிம் காங்கிரஸின் மீதான நம்பகத்தன்மைக்கு கேள்வி எழுப்புகின்றது. மசூறாவின் (கலந்துரையாடலின்) அடிப்படையில் அமையப் பெற வேண்டிய தலைமைத்துவம் இன்னும் அதன்பால் ஒழுங்குபடுத்தப்படாமல் இருப்பதுவே இங்கு முன்வைக்கப்படும் முதல் விவாதமாகும்.

அடுத்து கட்சி சமூகத்தின் நலனின் அடிப்படையில் செயல்படுகின்றதா அல்லது சமூகத்தின் நலன் என்று கூறிக்கொண்டு வேறொரு நலனுக்காய் செயற்படுகின்றதா என்ற வினா அண்மைக்கால நிகழ்வுகளை (2002-2007) வைத்து நோக்குகின்ற பொழுது தோன்றுகின்றது.

கட்சியின் இருப்புக்கு சவால் விடும் வகையில் சந்திரிக்காவின் செயற்பாடுகளுக்கு முன்னால் கட்சி மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சோதனைகள் புயலாய்வரும் பொழுது அழிவோடு சேர்ந்து அழிந்து போகின்ற சூழலை உணர முடிந்தது. உண்மையில் இராஜதந்திர அடிப்படையில் முடிவுகளை மேற்கொண்டிருந்தால் எதற்கு நாம் பேரம் பேசும் பலத்தை இழக்கப் போகின்றோம். தற்பொழுது(2007ல்) மஹிந்த அரசுடன் இணைந்து கொண்டது ஒன்றும் பேரம் பேசும் பலத்துடன் அல்ல என்பதும் தற்காப்பு எண்ணத்துடன் என்பதும் உண்மை. இவற்றையெல்லாம் வைத்து நோக்குகின்ற பொழுது கட்சி எதையோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற அல்லது எதையோவொன்றை மறைக்கப் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. இத்தகைய கட்சியின் மீது முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தொடர்ந்தும் இருக்கும் என நப்பாசை வைப்பது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாய் மாறிப்போகும். அது மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய இரண்டாம் கெட்டான் நிலைக்குக் காரணம் முஸ்லிம் சமூகத்தில் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் மாற்றுச் சக்தியின் பிரசன்னமின்மை ஒரு முதன்மைக் காரணமாகவே கொள்ளப்படவேண்டும்

முஸ்லிம் காங்கிரஸின் உள்விவகாரங்களை சந்திக்கு அழைப்பதோ அல்லது அதன் தலைமைத்துவம் உட்பட முக்கியஸ்தர்களின் முகத்திரை கிழிப்பதோ ஒரு ஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றத்திற்கு உரிய பண்பாக அமையாது. எனவே மிக மேலோட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்ற சூழலில் முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியலின் தேவை குறித்து எமது கவனத்தை செலுத்த முடியும்.

மிகச் சரியாக முஸ்லிம் காங்கிரஸை படிப்பவர்களுக்கு அதன் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒரு உண்மை மிகத் தெளிவாகத் தெரியும்.
முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் பணி என்ன? அதன் சமகாலப் போக்கு என்ன என்பதுவே அந்த உண்மை.

முஸ்லிம்களின் உரிமை, முஸ்லிம்களின் இருப்பு, நிலத்தொடர்பற்ற மாகாணம், தனி அலகு, துணை ஜனாதிபதி என அதன் வியாக்கியானமும் விளக்கங்களும் ஏராளம். ஆனால் இன்னதுதான் எமது நிலைப்பாடு என்று வரையறுத்து குறித்துச் சொல்லுங்கள் என்றால் மளுப்பலும் சலப்பலும்தான் விடையாகின்றது.

கிழக்கு மாகாணத்தின் தென்பகுதி (அம்பாரை) மக்கள் தனியலகில் ஆர்வமும் நாட்டமும் கொள்ள வடகிழக்கு(தி-மலை, மட்டக்களப்பு) பகுதி மக்கள் சற்றே முரண்பட்டுக்கொள்ளும் நிலை தொடங்கி வடமாகாண மக்கள் தமது இருப்பை பலவந்தமாக இழந்துள்ள சூழலில் இனத்துவ மோதல் குறித்த முஸ்லிம் காங்கிரஸின் மிகச்சரியான பொருத்தமான நிலைப்பாடு என்ன?

மிக அடிப்படையான இவ்வினா பற்றிய முஸ்லிம் காங்கிரஸின் ஸ்திரமற்ற கொள்கைகளின் மீது முஸ்லிம் சமூகம் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தையில் தனித்தரப்புகோரும் அதே நேரம் தனித்தரப்பில் நாம் எதை முன் கொண்டு செல்லப் போகின்றோம் என்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்ன சொல்லப் போகின்றது.

இனப்பிரச்சினையில் இப்படியான பலவீனமான நிலைப்பாடுகளுடன் உள்ள வேளையில் தென்னிலங்கையில் ஆளும் தரப்புடன் இணைந்ததான அரசியல் குறித்த கருத்;தை முஸ்லிம் காங்கிரஸ்; மெதுவாக முன்வைக்கின்றது. இதற்கும் முன்னைய பெரும்பான்மைகளுடனான ஒன்றித்த அரசியலுக்கும் என்ன வேறுபாடு இருக்கப்போகின்றது. வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தீர்வை மறுதளிக்கும் அரசுடன் தென்னிலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தேனிலவு நடத்துமா..?

இப்படியாக மிக அடிப்படையான அம்சங்கள் குறித்த ஸ்திரமற்ற நிலைப்பாடுகள் மீது மிண்டும் மீண்டும் மக்களை நம்பிக்கையூட்டுவது எவ்வளவு காலத்திற்கு சாத்தியம் எனவே முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் கருத்தையும் சக்தியையும் நோக்கி திரும்புவது அத்தியாவசியமாகின்றது.

சுனாமி பேரணர்த்தத்தின் போதும்ளூ யுத்த நிறுத்த காலங்களின் இன வன்முறைகளின் போதும் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போதும் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை திருப்திப்படுத்தும் நிலையிலிருந்து விடுபட்டு அது தன்னோடு இரகசிய உடன்பாடு கண்டவர்களை திருப்திப்படுத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தது என்ற பரவலான குற்றச்சாட்டு முஸ்லிம் காங்கிரஸ் மீதான நம்பிக்கையைத் தளர்த்தப் போதுமானது. முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் இருக்கின்றதா அல்லது எதிர்க்கட்சியல் இருக்கின்றதா என்பது கேள்வியல்ல. அது எப்படியிருக்கின்றது என்பதுதான் முக்கியம். இதனை மறைந்த தலைவரின் வார்த்தையில் சொல்வதென்றால் முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன் குடிகாரன் ஓட்டும் காரில் ஏறக்கூடாது அவர் அக்கூற்றின் மூலம் நாடியது எந்தக்கொள்கையுடன் என்பதுதான், ஆனால் தற்போது முஸ்லிம் காங்கிரஸின் நிலையையும் மேலுள்ள கூற்றையும் இணைத்துப்பார்க்கும் போது எமக்கு முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.


இப்படியாக சிறிய முஸ்லிம் கட்சிகளிடமும் முஸ்லிம் காங்கிரஸிடமும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் மாற்றுக்கருத்தொன்றின் பால் நிச்சயம் வழிகாட்டப்படவேண்டும். அல்லாதவிடத்து இத்தகைய சுயநல அரசியல்வாதிகளும் சந்தர்ப்ப அரசியல்வாதிகளும் எமது சமூகத்தின் தலைவிதியினை மாற்றி எழுதிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மிகப் பலவீனமான சிவில் சமூக ஒழுங்கைக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் தனது செயற்பாடுகள் மூலம் எப்படி முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் ஒழுங்குபடுத்தப்போகின்றது. உலமா சபையும், சமூக அமைப்புக்களின் கூட்டமைப்புக்களும் மிகப் பலமான நிலையைக் கொண்டதாக இல்லை என்பது சமகால சிவில் சமூக நடத்தைகளின் மாதிரிகளிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது.

இந்த அத்தியாயத்தின் முடிவில் பொதுவாக நாம் ஒரு கருத்தை மிக ஆணித்தரமாக உணர முடிகின்றது.

சிறிய முஸ்லிம் அரசியல் கட்சிகளோ முஸ்லிம் காங்கிரஸோ அவை தற்போதுள்ள ஒழுங்கில் நிலைத்திருக்கும்வரை அவற்றால் முஸ்லிம் சமூகத்திற்கான தீர்வை, அபிவிருத்தியை, முன்னேற்றத்தை பெற்றுத்தர முடியாது. மாற்றமாக முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் கருத்தின் பாலும் சக்தியின் பாலும் தேவையுடயதாக இருக்கின்றது. அம் மாற்றுக்கருத்து அல்லது சக்தி ஒன்றில் குறித்த அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதிலோ அல்லது அவற்றை ஓரங்கட்டும் நேரடி அரசியல் நடவடிக்கையிலோ நிச்சயம் கவனம் செலுத்துவதாய் அமையும். இத்தகைய முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொதுவாக மேற்கொண்ட முதன்மையான தவறு முஸ்லிம் அரசியலை இனத்துவ அடிப்படையில் அமைத்துக் கொண்டமை எனலாம். முஸ்லிம்களுக்கு என்று ஒரு அரசியல் ஈடுபாடு தனித்துவமாகத் தேவை என்பதைப் போலவே அது இனத்துவ சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உணரப்படுதல் வேண்டும்.

முஸ்லிம்களுடைய அரசியல் சிந்தனையானது நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம் என்பதிலும் நீதி நேர்மை என்பதிலும் தனது அடிப்படையை அமைத்துக் கொண்டிருந்தால,; நாம் இன்று வன்முறைகளால் அழிந்து கொண்டிருக்கும் ஓரு தேசத்தின் சொந்தக்காரர்களாக இருந்திருக்க வேண்டியதில்லை. அத்துடன் தனித்தரப்பும் தனியலகும் என்ற நிலை தாண்டி சிலபோது மத்தியஸ்தம் வகிக்கும் உண்ணத நிலை கூட எட்டப்பட்டிருக்கலாம். அது மட்டுமின்றி இனத்துவ உணர்வை கூர்மைப்படுத்துவதை விடவும் மழுங்கடித்திருக்கலாம். இவ்வாறாக முஸ்லிம் அரசியல் இனத்துவ ரீதியின் தனது அடையாளத்தை அமைக்காமல் மாற்று வழிகளில் முஸ்லிம்களின் மாற்று அரசியல்; கருத்தும் சக்தியும் வழிநடாத்தும் என்பதுவே எமது பொதுவான எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறாக முஸ்லிம் சமூக அரசியலானது மாற்று அரசியல் கருத்தையும், சக்தியையும் வேண்டி நிற்பது இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறினை திருத்தியமைப்பதற்கும் முஸ்லிம்களின் கௌரவமான அரசியல் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமேயாகும். மாற்றாமாக இதுவரை காலமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் மேற்கொண்ட அதே தவறை இன்னுமொரு கோணத்தில் நின்று மேற்கொள்வதற்கல்ல

இலங்கை முஸ்லிம் சமூகம் தனது அரசியல் பங்கு பற்றுதல் வரலாற்றில் எதிர்கொண்ட மிக இக்கட்டான காலமாக கடந்த தசாப்தம் அமைகின்றது. தற்போது பெரும்பான்மைக் கட்சிகளுடன் ஒன்றித்த அரசியலும் தனித்துவமான முஸ்லிம் அரசியலிலும் முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான மாற்று அரசியல் கருத்தும் சக்தியும் அவர்களின் தெரிவுக்கு முன்வைக்கப்படாத விடத்து அது இச்சமூக ஆர்வலர்களின் வழிகாட்டிகளின் வரலாற்றுத் தவறாய் அமையும். அத்தோடு முஸ்லிம் சமூகம் அரசியல் அடையாளம் தொலைத்த அநாதைகளாக்கப்படுவர். இத்தகைய அபாயம் தவிர்ப்பது இச்சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனினதும் தலையாய கடமை.



இஸ்லாமிய அரசியல் - முஸ்லிம் சமூக அரசியல்

இஸ்லாமும் அதன் அரசியல் சார்ந்த தோற்றப்பாடும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிபட முடியாதவை. ஏனெனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் தொட்டு 'இஸ்லாம் ஒரு அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டது' இருபத்து மூன்று வருட நபித்துவ வாழ்வை படிப்படியாக ஓர் அரசை நிறுவும் போக்கில் நபிகளார் நகர்த்தினார்கள். அபீஸினிய ஹிஜ்ரத், தாயிப் பயணம், மதீனா சாசனம், ஹிஜ்ரத், யுத்தங்கள், ஹூதைபியா உடன்படிக்கை, மக்கா வெற்றி என பல்வேறு கட்டங்களை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் இந்த உண்மையை உணர்ந்து கொள்வார். மிக எளிய வடிவில் புரிந்து கொள்வதாயின்ளூ இஸ்லாம் ஒரு பரிபூரண வாழ்க்கைத்திட்டம், அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இஸ்லாமிய அரசின் இருப்பு அத்தியாவசியமானது.
இந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுல் ஒன்றாக அல்லது அடிப்படை இலக்குகளில் ஒன்றாக 'இஸ்லாமிய அரசியல் அமைந்து விடுகின்றது'.
இஸ்லாமிய அரசியலின் பிராதான அம்சங்களாக

- ஜமாஅத்/உம்மத் (கூட்டமைப்பு/சமுதாயம்)
- இமாம்/கலீபா (தலைவர்/பிரதிநிதி)
- பைஅத்
- கூட்டாலோசனை
- சட்டம்
- நீதி
- நிர்வாகம்
- எல்லைகளற்ற ஆட்சிப்பிரதேசம்
- நெகிழ்வுத்தன்மை கொண்ட சட்டங்கள்
போன்ற சில பிரதான அம்சங்களை அடையாளப்படுத்த முடியும். எனினும் அதனது நடைமுறை வடிவம் குறித்து நோக்குகின்ற பொழுது 'நபி முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் தொட்டு மிகக்கிட்டிய 1924ம் ஆண்டுவரை இஸ்லாமிய ஆட்சி உலகில் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் மன்னராட்சி அமைப்பாகவோ, சர்வாதிகார ஆட்சியாகவோ, ஜனநாயக ஆட்சியாகவோ இஸ்லாமிய ஆட்சி முறையை அறிந்து கொள்ள முடியாது: மாற்றமாக சில அடிப்படைகளின் மீது நிறுவப்பட்ட பல்வேறு தோற்றப்பாடுகளை காலத்திற்குக் காலம் கொண்ட அமைப்பாகவே அதனை அடையாளப்படுத்த முடியும். இஸ்லாமிய உலகின் இறுதிக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளும்ளூ சதித்திட்டங்களும்ளூ இஸ்லாத்திற்கு எதிராக மேற்குலகால் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரங்களும்ளூ இஸ்லாமிய சமூகத்துக்குள் தோன்றிய பல்வேறு இயக்கங்களும்ளூ கூடவே அறபு, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தற்போதைய அரசியல் முறைமைகளும்: சமகால முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய அரசியல் என்ற முன்மாதிரிமிக்க வடிவத்தை விட்டும் தூர விலகியிருக்க செய்துவிட்டன. எனவேதான் இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்கள் அரசியல் என்பது மார்க்கத்;தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஒன்றாக எண்ணி அதிலிருந்தும் தூர விலகியிருக்க முற்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பானது உடலுக்கும் தலைக்கும் உள்ள தொடர்பை போன்றது என்பது இன்னும் உணரப்படவில்லை.

இஸ்லாத்தின் அரசியல் முறைமை

இஸ்லாத்தின் அரசியல் முறைமை பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கொண்டுள்ள வேளையில் சமகால இஸ்லாமிய அறிஞர்களுல் ஒருவரான ஹஸன் அல்துராபியுடைய கருத்து எம் கவனத்தை ஈர்க்கின்றது.
'ஆட்சி முறைமை பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடானது சில அடிப்படைகளில் தங்கி நிற்கின்றது. நிலப்பிரதேசம் - மக்கள் - அரசாங்கம் போன்ற தற்போதைய அடிப்படை அம்சங்களுடன் இணைந்து மேலதிகமாக மார்க்கம் சார்ந்த அடிப்படை விழுமியங்களையும் இணைத்துள்ளது. (சட்டமியற்றும் முறைமை, பிரதிநிதிகள் தெரிவுமுறை, கூட்டாலோசனை) போன்ற அடிப்படை அம்சங்கள் அவையாகும். இத்தகைய அடிப்படை அம்சங்களை கவனத்திற்கொண்ட ஆட்சிமுறைமையே இஸ்லாமிய ஆட்சிமுறைமையாகும். ஆட்சிமுறையின் இரண்டாம் தர அம்சங்களை மிகப்பொதுவான அடிப்படையில் காலம், இடம், தேவை என்பவற்றின் அமைப்பிற்கேற்ப நிறுவும் அல்லது வடிவமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. அவை இஸ்லாத்தின் அடிப்படைகளில் நிறுவப்படுதல் வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் இறுதி எதிர்பார்ப்பாகும்'.

Memorandum concerning the fully Islamic constitution for the republic of sudan (1967) Page5

மேற்படி கூற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆட்சிமுறைமை பற்றிய இஸ்லாத்தின் விசாலமான தன்மையை உணரமுடிகின்றது. மன்னராட்சி முறைமையோ, ஜனநாயக, பாராளுமன்ற முறைமைகள் எதுவாயினும் இஸ்லாமிய அடிப்படை அம்சங்கள் உள்வாங்கப்படுவதே பிரதானமானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மை இஸ்லாமிய ஆட்சி முறைமையின் மிகச் சாதகமானதும் விஷேடமானதுமான அம்சம் எனலாம்.
பொதுவான வழக்கில் இன்று உலகில் நிலவும் ஆட்சி முறைமைகளை வைத்து இஸ்லாமிய அரசியல் முறைமையை சிந்திக்கின்ற பொழுது – எல்லாமுறைமைகளிலும் இஸ்லாத்தின் அடிப்படைகள் உட்படுத்தப்படுமாயின் எல்லா ஆட்சிமுறைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. ஏனெனில் எல்லா ஆட்சிமுறைமைகளிலும் தலைமைத்துவம் இருக்கின்றது. சில தலைமைத்துவங்கள் தன்னிச்சையாக செயற்பட வேறு சில கூட்டாகலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இவ்வாறாக உலகில் உள்ள எத்தகைய ஆட்சிமுறைமையையும் இஸ்லாமிய ஆட்சிமுறைமையை நோக்கி எளிதாக உள்வாங்கப்பட முடியுமானதே.
எனNவு மிகப்பொதுவாக இஸ்லாமிய ஆட்சிமுறை பற்றிய மயக்கம் தேவையற்ற ஒன்றாகவே அமைந்துவிடுகின்றது. இஸ்லாமிய ஆட்சி முறைமை என்ற அடையாளத்துடன் உலகிற்குக் காட்டப்பட்ட முன்னுதாரணங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் அரசியலுக்கும் இடையே போடப்பட்ட பிரிகோடகவே அமைந்துவிட்டன. இவ்விடயத்தில் முஸ்லிம் உம்மத் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

சமகால முஸ்லிம் உலக அரசியல்

சமகால முஸ்லிம் உலக அரசியல் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிவுபட்டுக்கிடப்பதை அவதானிக்கலாம். மத்திய கிழக்கின் அறபு நாடுகளின் முடியாற்சி முறைமையும் ஏனைய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் நடைமுறையில் இருக்கும் மேலைத்தேய ஜனநாயக முறைமையுமே அவ்விரண்டு பிரிவுகளாகும். இத்தகைய நாடுகளில் இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களும், ஷரிஆவின் நடைமுறைகளும் வெறும் சம்பிரதாய அமைப்பாக இருக்கின்றனவேயன்றி யதார்த்தமான வடிவைக் கொண்டவனாக இல்லை என்பதும் அவதானிக்கத்தக்கது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியதாக கருதப்படும் இஜ்திஹாத்தின் முடக்கம் இஸ்லாமிய ஆட்சியினையும் மிகச் சீரான அரசியல் முறைமையிலிருந்து விடுபட்டு சர்வாதிகார முடியாட்சியை நோக்கியும் குறுநில மன்னராட்சியை நோக்கியும் முஸ்லிம் சாம்ராஜ்யத்தைத் தள்ளிவிட்டது. அதன் தொடர்ச்சியில் மேலைத்தேய ஆதிக்கம் படிப்படியாக இஸ்லாமிய உலகினுல் முன்னேறியது. குறிப்பிட்ட சில மத்திய கிழக்கின் குறுநில மன்னர்களை தொடர்ந்தும் மன்னராட்சிக்குள் அமர்த்திக்கொண்டு ஆசிய, ஆபிரிக்க முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஜனநாயக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தப் பிண்ணனியிலேயே பலஸ்தீனம் தொடங்கி ஈராக் வரையான முஸ்லிம் பிரதேசங்களில் மேலைத்தேய ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. முடியாட்சிகள் நிலவும் அறபுதேசங்களில் இஸ்லாமிய ஆட்சி முறை நோக்கிய முயற்சிகள் மிகக்கொடுமையான அடக்குமுறைகளின் மூலமும் சுதந்திரப் பறிப்பின் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேவேளை அவசரகாலச்சட்டம் போன்ற இன்னோரன்ன சட்டங்கள் மூலம் ஜனநாயக அரசியல் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளின் இஸ்லாமிய ஆட்சிமுறைக்கான முயற்சிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன்மூலம் மேற்குலகமும் எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள் இஸ்லாமிய ஆட்சிமுறைமையை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்துவிடுகின்றன. எனவே சமகால முஸ்லிம் உலக அரசியல் பொதுவாக இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரானதாகவே அடையாளம் செய்யப்படுகின்றது.

இது புறமிருக்க முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் முஸ்லிம் சமூக இருப்பு குறித்தும் அவர்களது சமூகநலன் சார்ந்தும் சிந்திக்கின்ற தலைமைத்துவங்கள் தத்தமது பிரதேச அரசியல் முறைமைகளுடன் ஒத்துப்போகும் தன்மையை அவதானிக்கின்ற முடிகின்றது. சமகால முஸ்லிம் உலக அரசியல் ஒழுங்கில் மறுக்க முடியாத ஒரு இடத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சியும் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆட்சி முறைமையும் முன்னர் நாம் குறிப்பிட்ட அனைத்து ஒழுங்குகளிலிருந்தும் மாறுபட்டது.
முஸ்லிம் உலக அரசியல் களத்தில் இன்றுவரை இஸ்லாமிய ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் வலுவாக மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் - இஸ்லாமிய ஆட்சிமுறை தொடர்பில் பல்வேறு கருத்துப்பறிமாற்றங்கள் இஸ்லாமிய அமைப்புகள் அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. முடியாட்சி முறைமை நிலவும் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக முறைமையை நோக்கிய கோறங்கள் எழும் அதேவேளை ஜனநாயக முறைமை அமுலில் இருக்கும் நாடுகளில் வேண்டாத அடக்குமுறைகளுக்கு எதிரான கோறங்கள் உரத்து எழுப்பப்படுகின்றன.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் றாஷித் அல்-ஹன்னூஸி, ஹஸன் அல் துராபி, அன்வர் இப்றாஹீம் போன்றவர்களுடன் இணைந்து அல்லாமா யூஸூப் அல் கர்ளாவியும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தை சக்திபெற்ற இயக்கமாக நிறுவுவதற்கு இத்தகைய முயற்சிகள் முஸ்லிம் உம்மத்தினுல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இங்கு நாம் மிக நிதானமாக இரண்டு அம்சங்களை கருத்திற் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் முஸ்லிம் அரசியல்
முஸ்லிம் சிறுபான்மை நாடுகளின் முஸ்லிம் அரசியல்
என்பனவே அவையிரண்டுமாகும்.
முஸ்லிம் பெரும்பான்மை சமூக அரசியல் நிலைமைகள் முஸ்லிம் சிறுபான்மை சமூக அரசியலுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒத்துப்போகாத தன்மையை காட்டி நிற்கின்றது. பொதுவாக முஸ்லிம் உலகில் அரசியல் குறித்தோ அல்லது நவீன அரசியல் அலகு குறித்தோ பெரிதாக கவனம் செலுத்தப்படாத சூழலில் முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளின் அரசியல் குறித்து சிந்திக்க இன்னும் பல தசாப்த்தங்கள் தேவைப்படலாம். எனவே பொதுவாக முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச அரசியல் ஒழுங்குகளிலும், பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளபட்ட கருத்துகளிலும் முற்று முழுதாக சிறுபான்மை முஸ்லிம் தேசங்கள் தங்கியிருக்க முற்பட்டால் அது சாதகமான எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே இலங்கை போன்ற முஸ்லிம் தேசத்தவர்கள் தமது அரசியல் குறித்த சிந்தனைகளின் போது முஸ்லிம் உலக அரசியலில் மிகுந்த கவனம் செலுத்தும் அதேவேளை தமது அரசியல் குறித்தும் தனித்துவமான பார்வையைக் கொண்டிருப்பது அவசியமே.

ஜனநாயகமும் இஸ்லாமும்

ஜனநாயகம் ஒன்றும் எதுவித பலமான அடிப்படைகளும் இன்றி குறிப்பாக இஸ்லாமிய சிந்தனையின் தாக்கம் இன்றி உருவாக்கப்பட்ட அரசியல் முறைமை என்பதில் நாம் உடன்பட முடியாது. அதேவேளை இஸ்லாமிய அரசியலுடன் முற்றிலும் சார்ந்து நிற்கும் மிக நேர்மையானதும் மிகப் பொறுத்தமானதுமான முறை என்று அழைத்து அங்கீகரிக்கவோ அல்லது இஸ்லாமிய முறைமைக்கு முற்றிலும் மாற்றமான முறைமை என்று புறந்தள்ளிவிடவோ முடியாது. இவ்வாறு நான் இங்கு குறிப்பிடுவது சிலபோது மயக்கமான தோற்றப்பாட்டைத் தரமுடியும். மிக நடுநிலையாக நின்று சிந்திக்கின்ற பொழுது இந்த முடிவை நோக்கி நாம் வருகின்றோம்.
'ஜனநாயகம் என்பது சமகாலத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதைப் போன்று மேற்கின் ஒரு தாராள்மைவாத அரசியல் முறைமை, மட்டுமல்ல அதன் ஆட்சியின் கீழ் மக்கள் சுதந்திரமாக அவர்களது பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் மாற்றியமைக்கவும் முடிகின்றது. மக்கள் ஆட்சியின் தீர்மானிக்கும் சக்தியாக இருக்;கும் அதேவேளை அவர்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் பாதுகாப்பும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயக முறைமை குறித்து குறை காண்பதற்கு முஸ்லிம்களுக்கு எத்தகைய தேவையும் இருப்பதாக தெரியவில்லை' என்று ராஷித் ஹன்னூஸி குறிப்பிடுகின்றார்.

(Rashid Ghannoushi, Interview with the Authors, London – 5 Feb 1993)


ஜனநாயக முறைமை தொடர்பில் முன்வைக்கப்படும் எதிர்வாதங்களுல் முதன்மையானது அது பெரும்பான்மை பலத்தில் தங்கியிருத்தல் என்ற விவாதமாகும். இஸ்லாம் ஏகோபித்த கருத்தில் கவனம் செலுத்துகின்றது. இருப்பினும் இஸ்லாமிய ஆட்சிமுறைமையில் அடிப்படை அம்சங்களில் எத்தகைய மாற்றுக்கருத்தும் இடம்பெறாத வகையில் அன்றாட நடத்தைகளில் பெரும்பான்மை பலத்தை பிரயோகிக்க முடியும். இதனை கலாநிதி யூஸூப் அல் கர்ளாவி தனது 'பிக்ஹூ அத்தவ்லா' என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்

'சிறைகளிலும், தூக்குமேடைகளிலும் எமது தஞ்சம் என்று கிடப்பதை விட, நாம் ஈமான் கொண்டுள்ள இஸ்லாத்தின் பாலும் அல்லாஹ்வின் பாலும் மக்களை ஒன்றுதிரட்டி வாழ்வின் யதார்த்தத்தை அவர்களுக்கு உணர்த்தி எமது உன்னதமான இலக்கினை யதார்த்தப்படுத்துவதற்காக ஜனநாயகத்திற்கு நான் எனது ஆதரவை முழுமையாகத் தருகின்றேன்'. -யூஸூப் அல் கர்ளாவி-

இவற்றை வைத்து நோக்கும் பொழுது பல்வேறு தேசங்களிலும் தோன்றிய இஸ்லாமிய இயக்கங்கள் தமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான மாற்றுவழியாகவும் மக்களை சீரான ஒழுங்கில் இஸ்லாமிய சிந்தனைக்குள் உள்வாங்குவதற்கான முறைமையாகவும் ஜனநாயகத்தை அடையாளம் காண்கின்றனர். தியூனிஸியா, சூடான், துருக்கி, எகிப்து, பலஸ்தீனம், மலேஸியா, பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் ஜனநாயக மரபுகளை ஏற்று தமது அரசியல் ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதை அவதானிக்கின்ற முடிகின்றது.

எனவே மிகப் பொதுவான அடிப்படைகளில் நோக்கும் பொழுது ஜனநாயகம் இஸ்லாமிய அரசியலின் மாற்று வடிவம் என்பதை விடவும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயக முறைமையானது இஸ்லாமிய சமூகத்தின் இருப்பையும் அதன் வளமானதும் ஸ்திரமானதுமான அடுத்தகட்டத்திற்கான படிக்கட்டாக அமைவதில் நாமும் உடன்படமுடியும்.

இஸ்லாமிய இயக்கங்கள் பொதுவாக அதன் அடிப்படைச் சிந்தனைகளில் வலுவான கவனம் செலுத்தும் அதேவேளை அவ்வப்பிரதேச அரசியல் களங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் தன்மையைப் பரவலாக அவதானிக்க முடியுமாக உள்ளது. இஸ்லாமிய கிலாபத் ஆட்சிக்கு மிகக் கிட்டிய காலப்பகுதி தொடங்கிய (1850களின் பிற்பகுதி) மேற்கத்தேய காலணித்துவத்திற்கு எதிரானதும் அறபுவாத அல்லது தேசியவாத சிந்தனைகள் பொதுவாக எல்லாப் பெரும்பான்மை முஸ்லிம், அறபு நாடுகளிலும் காணப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம் அல்லது இஸ்லாமியவாத சிந்தனைகளையும் தமது அடித்தளமாகக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட சமகால இஸ்லாமிய இயக்கங்கள் பொதுவாக அரசியல் ஈடுபாட்டுத் தன்மையைக் கொண்டிருந்தன எனலாம்.

தியூனியஸியா, சூடான், துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் அவை குறிப்பிட்டளவு செல்வாக்குடையனவாக வளர்த்தெடுக்கப்பட்டன. இருப்பினும் கிலாபத் வீழ்ச்சியைத் தொடர்ந்து உருப்பெற்ற நவீன இஸ்லாமிய சிந்தனைகளும், இஸ்லாத்திற்கு புத்துயிரூட்டி மீண்டும் இஸ்லாத்தை ஆட்சிபீடமேற்ற வேண்டும் என்ற நோக்குடைய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் சிந்தனைகள் சற்று மாறுபட்ட தோற்றப்பாட்டை கொண்டிருந்தன. முதலாளித்துவ, தாராண்மைவாதம், கம்யூனிஸம், சோசலிஸம் போன்ற இன்னோரன்ன அரசியல் சித்தார்ந்தங்கள் செல்வாக்குச் செலுத்தும் சூழலில் இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் ஒழுங்கானது சற்று மாறுபட்டே அமைகின்றது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இத்தகைய அரசியல் சக்திகளின் செல்வாக்கிலிருந்து பாதுகாப்பது ஒரு பொறுப்பான கடமையாகவே உணரப்பட்டது.

1950களைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கங்கள் இஸ்லாமிய கிலாபத்தின் உயர்தன்மை குறித்துப் பேசியதுடன் ஏனைய அரசியல் சித்தார்த்தங்களின் அரைகுறைத்தன்மை குறித்தும் அவற்றின் இயலாமை குறித்தும் வாதங்களை முன்வைத்தனர். எனவே இத்தகைய ஆட்சிமுறைகளை அங்கீகரிப்பதும் அவர்களோடு இணைந்து அரசியல் நடாத்துவதும் மார்க்க ரீதியில் 'ஹராம்' என அடையாளப்படுத்தப்பட்டது. ஏனெனில் கம்யூனிஸம், தாராண்மைவாதம் போன்றன இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை குழிதோண்டிப் புதைப்பதில் தீவிரமாக செயற்பட்டன. ஆனால் பிந்திய காலத்தின் ஜனநாயக முறைமையானது – முஸ்லிம்களின் அரசியல் குறித்த மீள் பரீசீலனையை வேண்டி நின்றது.

'இஸ்லாமிய சமூகம் சிவில் சமூக அமைப்பை நிறுவவதில் தீவிர கவனம் செலுத்துகின்றது. முஸ்லிம் அரசுகள் இராணுவத்தையும் பொருளாதார கட்டமைப்புக்களையும் நிறுவிவிடுவதில் தீவிரம் செலுத்துகின்றன. ஆனால் அவையிரண்டும் அரசியல் குறித்து கவனம் செலுத்துவதில்லை. தற்போது உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மிக வேகமாக சமூகத்துள் நுழைந்து அவற்றின் நிலைமைகளை மாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது. இந்நிலையில் நாம் ஏதேனும் ஒரு துறைசார்ந்து மட்டும் கவனம் செலுத்துவது எம்மையும் எமது சமூக அமைப்பையும் அழித்துவிடும். எல்லா விதமான ஆற்றல்களுடனும் சக்திகளுடனும் நவீன மயமாக்கத்தின் படைகள் ஜனநாயக முறைமையையும் மேலைத்தேய திறந்த பொருளாதார முறைமையையும் விரிவான சுதந்திர முறைமைகளை அள்ளிக்கொண்டு எமது சமூகத்தில் நுழைந்து விடுமாயின் அது எம்மை அழித்துவிடுமேயன்றி – எமது இருப்பைப் பாதுகாக்காது. இஸ்லாமிய இயக்கங்கள் மிக நுணுக்கமாகச் சிந்தித்து தமது நிலைப்பாடுகளை மீள் பரீசிலிக்கும் காலத்தில் உள்ளன. சடவாத சிந்தனைகளை விட்டும் எமது சமூகத்தைப் பாதுகாப்பதாயின் அரசியல் குறித்த எமது நிலைப்பாடுகள் மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.'

Secularism in the Arab Maghreb' in Islam and secularism in the Middle East (New York University press 1999-P III)

மேற்படி கருத்தில் நின்று சிந்திக்கின்ற பொழுது இஸ்லாமிய இயக்கங்கள் தமது அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றங்களை நோக்கி நகரவேண்டியதன் தேவை உணர்த்தப்படுகின்றது.

'முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் வளப்பற்றாக்குறை, அது பொருளாதார ரீதியான வளமாயினும் அறிவியல் விஞ்ஞான ரீதியான கல்வி வளமாயினும் அல்லது ஆளுமைபெற்ற மனித வளமாயினும் சரி அவற்றில் காணப்படும் போதாக்குறை முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாமிய சிந்தனையினதும் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதைவிட்டும் தடுக்கின்றது.மேலைத்தேய சிந்தனைகள்ளூ தமது சிந்தனையை நிறுவுவதற்கென எல்லா விதமான வளத்தயாரிப்புகளுடனும் களமிறங்கியுள்ள வேளைகளில் இஸ்லாத்தின் மீதான கவர்ச்சியை நாம் எங்கிருந்து பெறப்போகின்றோம். இஸ்லாமிய சமூகம் இருக்கின்றது என்பது இஸ்லாமிய அரசு இருக்கின்றது என்பதற்கு ஒப்பானதே இஸ்லாமிய சமூக நிறுவலுக்கான எத்தகைய முயற்சியும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்கு முறையொன்றிற்கான நிறுவலாகவே அமையும். இஸ்லாமிய சமூகத்தை நிறுவுவதற்கான ஒரே வழியும் உயர்வான சக்தி கொண்ட அமைப்பும் அரசியலே

Hassan AL - Thurabi 'Principles of Governance, freedom and Responsibility in Islam (1987) (American journal of Islamic Social Sciences - 4:1)


இஸ்லாமிய சமூக அமைப்பு என்ற இஸ்லாமிய இயக்கங்களின் வேலைத்திட்டமானது இஸ்லாமிய அரசியலை நிறுவும் வேலைத்திட்டமேயன்றி வேறொன்றல்ல. இங்கு இஸ்லாமிய இயக்கங்கள் தமது அரசியல் குறித்த செயற்பாடுகளை பின்னொரு காலத்திற்கு என ஒதுக்கி வைத்துள்ளார்கள் ஆனால் உண்மையில் அதுவே முதன்மைப்படுத்தப்படுதல் வேண்டும். அப்போது மட்டும் தான் சிவில் சமூகத்தை அமைக்கும் எல்லா வழிகளிலும் தேவையான வளமும் ஆற்றலும் இஸ்லாமிய இக்கத்துக்கு பெற்றுத்தரப்படும். அவ்வாறன்றி சிவில் சமூகத்தை அமைத்து அதில்; வெற்றி கண்ட பின்னர் அரசியல் பற்றிச் சிந்திக்கலாம் என காலத்தையோட்டுவது, முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய இயக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழப்பதற்குப் போதுமான முயற்சியை மேற்கொள்கின்றது என்றே அர்த்தப்படும்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் 1980 களின் ஆரம்பத்தில் பெறும்பாலும் சமகால அரசியல் நீரோட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டன.எகிப்து, சூடான், துருக்கி, தியுனிஷியா, பாகிஸ்தான், பலஸ்தீனம் மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில் மன்னராட்சி முதறையிலிருந்து படிப்படியாக ஜனநாயக வடிவமைப்பை நோக்கிய அவற்றின் பயணத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் குறிப்பிட்ட செல்வாக்கைச் செலுத்துகின்றன.

குவைத்தின் கீழ்சபைக்கான தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் செல்வாக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. எனினும் பெறும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பெறுஞ்சவாலாக இருப்பது அங்கு நிகழும் பரம்பரைசார்ந்த முடியாட்சியேயாகும். இஸ்லாமிய சிந்தனையின் எழுச்சியிலும் இதுவே மிகுந்த தாக்கத்தை செலுத்துகின்றது. வங்காளதேசத்தின் இஸ்லாமிய இயக்கத்தின் மிகக் கிட்டிய அரசியல் நகர்வுகள் அறபுதேசமல்லாத முஸ்லிம் பெறும்பான்மை நாடுகளின் இஸ்லாமிய இயக்க அரசியல் குறித்த அவதானத்தை வெகுவாக ஈர்க்கின்றது.

முஸ்லிம் பெறும்பான்மை தேசங்களின் இஸ்லாமிய இயக்க அரசியல் முஸ்லிம் சிறுபான்மை தேசங்களின் இஸ்லாமிய இயக்க அரசியலில் நின்றும் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.

மிகப்பொரிய முஸ்லிம் சிறுபான்மை தேசம் எனக் கொள்ளப்படும் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம் இன்றும் நேரடி அரசியலுக்கு வராத சூழலில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மிகச்சிறிய முஸ்லிம் சிறுபான்மை தேசங்களில் இஸ்லாமிய இயக்க அரசியல் நடவடிக்கைகள் வெகுவாக முன்னெடுக்கப்படுகின்றன.

மிகக் கூடிய புரிந்துணர்வுடன் கூடிய மாற்று அரசியல் சக்திகளும், இங்கு நடைமுறையில் இருக்கும் ஜனநாயக அரசியலுமே இதற்குக் காரணம் எனக்கொள்ளப்படுகின்றது. அத்தோடு அங்கு நிலவும் அறிவியல் ரீதியான சாதகமான நிலைகளும் இதற்குக் காரணம் எனலாம். இவ்வாறாக விரல்விடடு எணணக் கூடிய முஸ்லிம் சிறுபான்மை தேசங்களின் இஸ்லாமிய இயக்க அரசியல் முறையானது தற்பொழுதே ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனலாம். இது ஒரு சாதகமான சூழ்நிலையாகும். இந்நிலையில் இலங்கையின் இஸ்லாமிய இயக்க அரசியல் குறித்த கருத்துப்பரிமாற்றம் இஸ்லாமிய அரசியலும் - முஸ்லிம் சமூக அரசியலும் என்ற எமது இப்பகுதிக்கு மேலும் வலுசேர்ப்பதாய் அமையும்.



இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்களும் அதன் அரசியலும

இலங்கையின் இஸ்லாமிய இயக்கத்தின் தோற்றமானது ''மிகச்சீரான இஸ்லாமிய சமூக உருவாக்கத்தை|| நோக்காகக் கொண்டிருந்தது. அதற்கான இஸ்லாமிய இயக்கத்தின் வேலைத்திட்டங்களும், அதன் மக்கள் தொடர்பும் இஸ்லாமிய இயக்கம் பற்றிய கௌரவமான ஒரு தோற்றப்பாட்டை மக்களிடையே வளர்த்து விட்டது. எனவே இலங்கையின் முஸ்லிம் சமூகம் வன்முறைகளுடனும் மிகவும் மோசமான அரசியல் கலாசாரத்துடனும் தமது கௌரவமான இஸ்லாமிய இயக்கத்தை இணைத்துப் பார்ப்பதில் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்லாமிய இயக்கத்தின் சர்வதேசிய இஸ்லாமிய அரசியல் குறித்த நிலைப்பாடுகளில் திருப்தி கொள்ளும் மக்கள் - தேசிய அரசியலின் பக்கம் தலைகாட்டக் கூடாது என்று கூறுவது எந்தவகையில் யதார்த்தமாகும்.? பலஸ்தீனப் போராட்டத்தில், ஈராக் ஆப்கான் ஆக்கிரமிப்புக்களின் போது இஸ்லாமிய இயக்கம் முன்னெடுக்கும் காத்திரமான முயற்சிகளுக்கு தம்மை முழுமையாக தரும் முஸ்லிம் சமூகம் தேசிய அரசியல் விவகாரங்களில் இஸ்லாமிய இயக்கத்தை அனுமதிக்காத போக்கு எத்தகைய நியாயப்பாட்டையும் தோற்றுவிப்பதில்லை.

இன்றுவரை தேசிய அரசியல் குறித்த கருத்தொன்றை இஸ்லாமிய இயக்கத்தின் கருத்தாக எந்த இஸ்லாமிய இயக்கமும் முன்வைக்கவில்லை. சிலபோது அக்கருத்துக்கள் சிவில் சமூகத்துடைய கருத்தாகவோ, அல்லது ஏதாவதொரு கூட்டமைப்பின் கருத்தாகவோ இருக்குமே தவிர ஒரு இஸ்லாமிய இயக்கத்துடைய கருத்தாக இருப்பதில்லை. இன்று எமது சமூக சூழலில் காணப்படும் பலதரப்பட்ட இஸ்லாமிய இயக்க ஒழுங்குகளும் இதற்கான ஒரு காரணம் எனலாம். இங்கு நாம் இஸ்லாமிய இயக்கம் எனக் குறிப்பிடுவது ''இஸ்லாமிய ஒழுங்கு முறைகளின் படி சமூக உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கான திட்டமிடலுடனும் தலைமைத்துவத்துடனும் தேசிய ரீதியாக செயற்படும் அமைப்புக்களையேயாகும்."

இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் என்பதை விடவும் சமூக மேம்பாடு சார்ந்த பகுதிகளில் அதன் ஈடுபாடு இன்று பரவலாக மேற்கொள்ளப்படுகன்றது. இலங்கை போன்ற பல்லின சமூகங்கங்கள் வாழும் தேசம் ஒன்றில் சமூக மேம்பாட்டுக்கான செயற்திட்டங்கள் வெறும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பணி என்று கூறிவிட முடியாது அது இன்னும் பல்வேறு துறைகளை வேண்டி நிற்கும் அதில் பிரதானமான பகுதி அரசியல் எனலாம்.

இத்தகைய தேவை பரவலாக உணரப்பட்டபொழுதிலும் இஸ்லாமிய இயக்கங்கள் தமது அரசியல் குறித்த நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாக வெளிப்படையாக உணரமுடிவதில்லை. முஸ்லிம் பெறும்பான்மை தேசங்களில் இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பங்கு பற்றுதல் மிகத்தெளிவாக காணப்படும் அதேவேளை முஸ்லிம் சிறுபான்மை தேசங்களின் இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பங்குபற்றுதல் தெளிவாக உணரப்படாமையும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

இருந்த பொழுதிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் அரசியல் பங்குபற்றுதல், அமெரிக்க அரசியலில் அங்குள்ள இஸ்லாமிய இயக்கங்களின் பங்குபற்றுதல், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பங்கு பற்றுதல் என்பன இலங்கை போன்ற மிக முனைப்பான சிறுபான்மை சமூகத்தைக் கொண்ட தேசமொன்றின் இஸ்லாமிய இயக்கங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகக் கொள்ளமுடியும்.

இஸ்லாமிய இயக்கங்கள் - இலங்கையின் அரசியலில் பங்கெடுக்காமைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று ''இலங்கை முஸ்லிம் சமூகம் தனது அரசியல் தேவை குறித்து இஸ்லாமிய இயக்கங்களிடம் தங்கியிருக்க வில்லை||பொதுவாக உலகமெங்கும் நிலவிய இஸ்லாம் பற்றிய குறைவான மதிப்பீடு இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் தமது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் அம்சமாக இஸ்லாத்தை எடுத்துக் கொள்வதற்கு மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டிய தேவை சுதந்திரத்துக்கு முற்பட்ட காலம் முதல் ஏற்படடுவிட்டது. எனவே அவ்வப்போது நடைமுறையில் இருந்த மிகப் பொதுவான ஒழுங்குகளின் அடிப்படையில் தமது அரசியல் சார்ந்த தேவைகளை முஸ்லிம்கள் நிறைவு செய்தனர். 1980 களின் ஆரம்பத்தில் வடகிழக்கில் தோன்றிய அசாதாரண நிலைமைகள் 1988 களில் முஸ்லிம்களை தனியான அரசியல் சக்தியொன்றினை நோக்கி வழிகாட்டியது. அப்போது இஸ்லாமிய இயக்கத்தை நோக்கி முஸ்லிம் சமூகம் திரும்பவில்லை அல்லது முஸ்லிம் சமூகத்தின் தேவை தீர்க்க இஸ்லாமிய இயக்கம் துணியவில்லை என்று குறிப்பிடலாம்.

முஸ்லிம் காங்கிரஸின் வரவும் அது முஸ்லிம் சமூகத்தை விழித்துப் பேசிய அமைப்பும் முஸ்லிம்கள் இஸ்லாமிய இயக்கத்தை நோக்கி வருவதைவிடவும் முஸ்லிம் காங்கிரஸின் வழியில் சரிகாணத் தொடங்கினர் எனலாம். 1990 களின் தொடக்கத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஏக தெரிவாகவும் அதுவே இருந்தது. ஆனால் 15 வருடங்கள் தாண்டி இன்றைய நிலையிலும் அத்தகைய நிலை தொடர்வதாக கொள்ள முடியாது. இலங்கை முஸ்லிம் சமூக அரசியல் எதிர்பார்த்த எந்த அடைவையும் சமகால முஸ்லிம் அரசியல் முறைமைகளால் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க முடியாத சூழல் உள்ள நிலையிலும் இஸ்லாமிய இயக்கம் முஸ்லிம் சமூகத்தின் தேவையை உணர்ந்து செயற்படும் அதேவேளை முஸ்லிம சமூகம் அத்தகைய முடிவை உறுதிப்படுத்துவதாய் தனது செயற்பாடுகளைத் திருத்தியமைத்தல் வேண்டும்.

இஸ்லாமிய இயக்கம் சமூகப் புணர்நிர்மானம் குறித்து சிந்தித்த வேளையில் அரசியலை விடவும் முதன்மைப் படுத்தப்படவேண்டிய பல்வேறு அம்சங்கள் அப்போது உணரப்பட்டமையும், அவைமீதான கவனக்குவிப்பின் தேவையும் இஸ்லாமிய இயக்கத்தை இலங்கையின் முஸ்லிம் அரசியல் ஈடுபாடு குறித்து காலதாமதமாக சிந்திக்க நிர்ப்பந்தித்திருக்கலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இஸ்லாமிய இயக்கம் தனது கருத்தை மீள்பரிசிலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

  • இஸ்லாமிய இயக்கம் குறித்த மக்களின் நிலைப்பாடு.
  • முஸ்லிம் சிறுபான்மை தேசங்களின் அரசியல் ஈடுபாடு.
  • மாற்று வழிகளில் முஸ்லிம்கள் தமது அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டமை.
  • இஸ்லாமிய இக்கத்தின் சமூகப் புணரமைப்புப்பணியின் முதன்மைப்; படுத்தும் அம்சங்கள்.


போன்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய காரணிகளால் இஸ்லாமிய இயக்கம் முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் நேரடியாகப் பங்குபற்றும் நிலை அவதானிக்கப்படவில்லை. எனினும் சர்வதேச அரங்கில் ஏட்பட்டுவரும் மாற்றங்கள், இஸ்லாமிய அறிஞர்களிடையே இஸ்லாமிய அரசியல் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள், முஸ்லிம் சமூகத்தின் மிப்பின்தங்கிய நிலைமைகள், என்பவற்றை அவதானிக்கும் பொழுது இஸ்லாமிய இயக்கம் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிர்காலம் குறித்த காத்திரமான சிந்தனைகளுடன் நேரடி அரசியலுக்கு அறிமுகமாவது இன்று பலராலும் பலவகையிலும் முன்மொழியப்படுகின்றது. எதிர்பார்க்கப்படுகின்றது.


இலங்கை முஸ்லிம் அரசியல் - நேற்று - இன்று - நாளை

நேற்று - 1915 - 2000

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையின் வரலாற்றுடனும் அதன் பாரம்பரிய, கலாசார பண்பாட்டு அம்சங்களுடனும் மிக வலுவான தொடர்பைக் கொண்டது.

கி.மு தொடங்கிய ஆரியரின் வருகையும் அதனைத் தொடர்ந்த இந்துக்களின் வருகையும் இடம்பெற்ற அதே காலத்தில் சர்வதேச கடலோடிகளான அறபிகலுடைய வருகையும் இலங்கையில் நிகழ்ந்திருக்கின்றது. கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாகின்றது. அன்று தொடங்கி இலங்கை மன்னர்களுடன் முஸ்லிம்களுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன. இறுதியாக 1815ல் வீழ்ச்சி கண்டி இராசதானியத்தில் முஸ்லிம்கள் கனிசமான பங்கினை வகித்தார்கள் என்பது 2ம் இராஜசிங்க மன்னன் முஸ்லிம்களுக்கு வழங்கிய பரிசில்கள், நன்கொடைகள் என்பவற்றின் மூலம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படக் கூடியதாக அமைகின்றது.

ஒல்லாந்தருடையதும் போர்த்துக்கீசருடையதுமான ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளாவிடினும்; வர்த்தக ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆங்கிலயரின் ஆட்சிக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சூழலை அவதானிக்க முடியும். பிர்த்தானியரின் அடிப்படைக் கோட்பாடாகிய (னுiஎனைந யனெ சரடந) பிரித்தாலும் போக்கு இலங்கையிலும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டது. இத்தகைய நடைமுறையால் பாதிப்புக்குள்ளான இலங்கைச் சமூகத்தவருள் முஸ்லிம் சமூகமும் அடங்கும்.

1915ல் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் முஸ்லிம்கள் இலங்கையில் தனியான இனம் என்பதை நிறுவியது. கலவரத்தை அடக்கும் முகமாக சிங்கள சமூகத்தின் முக்கிய தலைவர்களை பிர்த்தானியப் பொலிசார் சிறைப்பிடித்தனர். கு.சு. சேனாநாயகா, னு.ளு. சேனாநாயகா உட்பட பல தேசியவாதத் தலைவர்கள் சிறைப்பிடிக்கத்தலைப்பட்டனர். அப்போது படித்த இலங்கையர்; சார்பில் தேசியப் பேரவையில் அங்கத்துவம் வகித்த சேர். பொன் இராமநாதன் கடல் மார்க்கமாக பிர்த்தானியா சென்று அங்குள்ள பிரபுக்கள் சபையில் வாதாடி சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்தார். இதனால் சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் அவர் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தும் சிங்களவர்களால் பாரிய வரவேற்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர்இழுத்தனர். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.

இது ஒரு சுமையான வரலாற்றுச் சம்பவம் என்பதை விட இனத்துவத்திற்கான வேர்கள் சூழுவேர்பிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதிநடவடிக்கையேயன்றி வேறில்லை.; முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்குமான இனத்துவமோதல் என்பதைவிட சிங்கள-தமிழ்-முஸ்;லிம்களுக்கான முக்கோணச்சமரின் தொடக்க விழாவே 1915ல் பிர்த்தானியரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்களவர் தரப்பில் மேல்நாட்டுச் சிங்களவர் அல்லது கண்டிச்சிங்களவர் என்றும் கரையோரச் சிங்களவர் என்றும் முஸ்லிம்களில் இலங்கை - இந்திய முஸ்லிம்கள் சோனகர் - மலாயர் என்றும் தமிழர்களில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்றும் மலைநாட்டுத் தமிழர் என்றும் பிரித்தாலும் வடிவங்கள் நீண்டு கொண்டே சென்றன. சேர்.பொன் இராமநாதனுடைய - முஸ்லிம்களும் தமிழர்களே என்ற விவாதத்தை எதிர்த்து யு.ஆ.யு .அஸீஸ் முடுக்கிவிட்ட எதிர்வாதங்கள் பொன்னம்பலத்தின் விவாதத்திற்கு ஆப்புவைத்தன.

என்றாலும் முஸ்லிம் தமிழ் உறவில் பொன் இராமநாதன் ஒரு நீங்காத பிரிகோட்டை வரைந்தார் என்றே கொள்ளப்படுகின்றது. 1915 - 1930 வரை சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகளும் 1930 ற்குப் பின்னர் சிங்கள - தமிழ் முரண்பாடாகவும் இலங்கை இனத்துவப் போராட்டத்தில் மூழ்கி இனத்துவ அடையாளத்தையும் வேறுபாட்டையும் ஒரு விதியாகக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்பட்டது. அத்தகைய இனத்துவ அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு சூழல் இன்றுவரை தொடர்கின்றது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கை அரசியலில் முஹம்மதியர்களுக்கான விஷேட தனியார் (திருமண) சட்டங்கள் 1806 ம் ஆண்டுகளில் பிர்த்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 1905 ல் ஆ.ஊ. அப்துல் காதிர் உடைய துருக்கித் தொப்பிப்போராட்டம் தொடங்கி 1915 வரை பொன் இராமநாதனுடைய தமிழர் அடையாளத்திற்கு எதிரான யு.ஆ.யு அஸீஸ் உடைய விவாதங்கள் வரை நோக்குமிடத்து பிர்த்தானியர்களை விடவும் சிங்கள - தமிழ் மக்களுடைய ஆதிக்க எண்ணமே மேலோங்கியிருந்தது.

1930 களில் சோனகர் என்றும் மலாயத்த சமூகத்தவர் என்றும் பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூக அரசியல் 1939 ல் கூட்டப்பட்ட அரசியல் மாநாட்டைத் தொடர்;ந்து வலுவான முஸ்லிம் அரசியல் என்ற நிலைக்குத் திரும்பியது. சோனகர் சமூகப்பிரதிநிதிகள் ராசிக் பரீத் தலைமையிலும் மலாய் சமூகப் பிரதிநிதிகள் வு.டீ. ஜாயா தலைமையிலும் செயற்பட்டனர். இருப்பனும் பிந்திய காலங்களில் கூட்டாக சமூகப் போராட்டம் தொடக்கப்பட்டது. வர்த்தகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிக மோசமானதாகக் காணப்பட்டது.

1891ன் கணிப்பின் படி படித்த முஸ்லிம் ஆண்கள் 30.5மூ பெண்கள் 1.5மூ மாகவுமே காணப்பட்டது. இந்நிலைமை பின்னர் மிகவும் வீழ்ச்சி கண்டது. முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையாய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினை அடையாளப்படுத்தப்பட்டது.

சர்வசன வாக்கெடுப்புக்கு முன்னர் - படித்த, பணம் படைத்தோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் டொனமூர் சீர்திருத்தங்களின் போது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. எனவே முஸ்லிம்களுடைய வாக்காளர் பலம் சர்வசன வாக்குரிமை வழங்கலூடாக சற்றே முன்னேற்றம் கண்டது. இருப்;பினும் கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அவதானிக்கப்படவில்லை.

மாற்றமாக முறண்பட்ட கருத்துகளும் தன்மைகளுமே வலுவாகக் காணப்பட்டது. குறிப்பாக கிழக்கிலங்கையில் பெறும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள், தாம் கொண்டிருந்த ஆட்புல எல்லையின் அடிப்படையிலும் தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் கொழும்புத் தலைமைத்துவத்திற்கு அதிக ஈடுபாடு இருப்பதாக உணரவில்லை, காரியப்பர் போன்ற தலைவர்கள் கிழக்கில் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தனர்.

இருப்பினும் பிற்பட்ட காலங்களில் இந்நிலையில் மாற்றங்கள் தோன்றின. கொழும்பு அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு மிகக் கிட்டிய காலத்தில் இலங்கை அரசியலில் தமிழ் - சிங்கள பிரிவினைகள் மேலோங்கத் தொடங்கின. டொனமூர் சீர்திருத்த சபையிடம் ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 திட்டம் ளு.று.சு.னு. பண்டார நாயக்கா போன்றோரின் சிங்கள மொழி முன்மொழிவுகள் நிலைமையின் மோசமான தன்மையினை எடுத்துக் காட்டுகின்றன. 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பானது இனத்துவ ரீதியான பிரதிநிதிகளை தேசிய பேரவைக்குத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.

இவ்வாறாக சுதந்திர இலங்கைக்குள் நுழைகின்ற போது இனத்துவ அடயாளங்களை மிகத் தெளிவாக சுமந்து கொண்டே நுழைந்தோம். இங்குதான் (தமிழ் - முஸ்லிம்) முஸ்லிம் - சிங்கள இனத்துவ உறவுகளின் தெளிவான தன்மையும் புரிந்துகொள்தல் வேண்டும். அதாவது தமிழ் - முஸ்லிம் உறவில் உள்ள விரிசல் தமிழ் - சிங்கள உறவில் உள்ள விரிசல் இரண்டும் முஸ்லிம்களை வடகிழக்கிற்கு வெளியில் சிங்களவர்களுடன் கூட்டிணைந்து விட்டது.

எனவே அப்போதைய கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் பெறும்பான்மைக் கட்சிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அதேபோன்றே வடகிழக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுடன் நல்லினக்கத்தைப் பேண முற்பட்டதையும் அங்கு நிலவிய அரசியல் உறவுகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

செனட்டர் ராசிக் பரீத் தொடங்கி பதியுத்தீன் மஹ்மூத், மாக்கான் மாக்கார், நெய்னாமரிக்கார், எச்.எஸ். ஸ்மாயில் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் பெறும்பான்மை சமூகத்துடன் கூட்டிணைந்த அரசியல் போக்கையே முஸ்லிம்களுடைய அரசியல் போக்காக கருதினர். இத மிக நீண்ட காலம் செல்லுபடியாகும் போக்காக அமையவில்லை முஸ்லிம் அரசியல் வாதிகளின் சில முற்போக்கான செயற்திட்டங்களால் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பண்பாட்டு, அம்சங்களிலும் அரச துறை வேலைவாய்ப்புக்களிலும் ஓரளவு மன்னேற்றம் ஏற்படுத்தப் பட்டது.

இருப்பினும் இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் ஒவ்வொரு இனத்துவக் குழுக்லும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இப்போக்கு அமையவில்லை. பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் குறித்த ஒரு சமூகம் தனது பெறும்பான்மைப் பலத்தைப் பிரயோகித்து சிறுபான்மைகளை அடக்க முயல்வதும், அவர்களது உரிமைகள் விடயத்தில் பொடுபோக்கா செயற்படுவது தவிர்க்க முடியாதது.

அத்துடன் அச்சமூகம் தனது மத, கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை ஏனைய மத, கலாசார அம்சங்களை மதிக்காத சூழல் இன்றுவரை பரவலாக உணரப்படுகின்றது. எனவே பல்லின சமூகம் வாழும் நாடொன்றில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் சமமான அதிகாரப் பகிர்வும் ஆட்சி முறைமையும் அவசியப்படுகின்றன. இது இன்று பொதுவாக உலக அரங்கில் ஏற்று நடைமுறைப்படுத்தும் அம்சம். இந்தியா போன்ற நாடுகள் இதற்குத் தக்க முன்னுதாரணமாக இருக்கின்றன.

இலங்கையில் 1985 வரையான காலப்பகுதியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியும், ஐ.தேசியக் கட்சியும் சிறுபான்மைகள் விடயத்தில் மிகவும் கடுமையான போக்கையே கடைபிடித்தனர். அதன் உச்சகட்ட வெளிப்பாடே இன்றைய வன்முறைக் கலாசாரமும் யுத்த சூழலுமாகும். குறிப்பாக முஸ்லிம்களுடைய விடயத்தில் இரண்டு பெரும்பான்மைகளும் தமது சுயஉருவத்தை அவ்வப்போது வெளிக்காட்டியே வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவை வன்முறைகளாக வெடித்தன, ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவை தனிப்பட்ட பழிவாங்கல்களாகவே தொடர்ந்தன.

சோனகர் என்றதும் கல்வி, தொழில்வாய்ப்பு, இதர அரச துறைகள், வைத்தியம், கட்டடநிர்மானம், வர்த்தகம், விவசாயம், காணிப்பகிர்வு என ஏராளமான துறைகளில் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமே வந்துள்ளனர். எனவே இத்தகைய அடக்கு முறைகள் பாரபட்சங்கள் என்பவற்றிற்கு நிரந்தரத் தீர்வு சட்டரீதியான தீர்வாக மட்டுமே அமையும் அன்றி வேறொன்றாக அமையாது. அத்தகைய சட்டரீதியான தீர்வை முன்மொழிவதும் அதற்கான சரியான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்வதும், அத்தீர்வின் நடைமுறை வடிவத்தை உறுதிப்படுத்துவதும், பெறும்பான்மை அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைந்து கொண்டு அரசியல் நடாத்துவதால் எட்டப்படமுடியாததாகும்.

எனவே இத்தகைய நீண்ட பின்புலத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் தனித்த அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டது. இலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் ஒரு புதிய பரிமானத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வடகிழக்கின் தமிழ்ப் பெறும்பான்மைத் தலைவர்கள் இதுவரை காலமும் தம்முல் ஒன்றாக ஒரு பிரிவினர்களாக அடையாளப்படுத்தி அடக்க முற்பட்ட ''தமிழ்ப்போசும் இஸ்லாமியர்கள்|| அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் என்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு தனித்துவமான இனத்துவம் என்று பிரகடனப்படுத்தியது.

ஏ.எம்.ஏ அஸீஸ் சேர். பொன் இராமநாதனுடன் தொடக்கிய விவாதத்திற்கு விடையாக எம்.எச்.எப் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை நிறுவினர். சிங்கள பெறும்பான்மைக் கட்சியினர் முஸ்லிம் காங்கிரஸின் வரவை தூரத்து சவாலாகவே நினைத்தனர். ஆனால் சிங்கள இனவாத, பௌத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழப்போராட்ட அமைபபுக்களும் ''முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய அமைப்பாக|| மு.காவைக் கருதினர். குறிப்பாக வடகிழக்கில் வலுப்பெற்றுவந்த தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை அடக்கியாள முற்பட்டது. தமிழ் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டதைப்போன்று ஆயுதப்போராட்டத்திலும் முஸ்லிம்களை உள் வாங்க முற்பட்டது. ஆனால் தீர்வுகள், கோரிக்கைகள் விடயத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வந்தது. இதனை உணர்ந்தே குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்டது.

தக்பீர் கோஷங்களுடனும், இஸ்லாத்தையும் இஸ்;லாமிய விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் - இஸ்லாமிய அரசியலை நிறுவுவதற்கான நிறுவன அமைப்பாகவுமே முஸ்லிம் காங்கிரஸ் தோன்றியது. இந்த அடிப்படை முஸ்லிம சமூகத்தைப் பொறுத்தவரை வெகுவாக வரவேற்கப்பட்டது. வலுவான ஆதரவுத்தளங்கள் குறிப்பாக வடகிழக்கிலும் பொதுவாக இலங்கையெங்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்தது. 1989 - 90 வரையான 10 வருடத்தினுள் 11 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அரசின் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி கண்டது என்றால், அது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களின் உழைப்பு என்பதற்கு அப்பால் அவர்கள் முன்வைத்த ''இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட பிரசாரங்களும் முஸ்லிம் சமூகத்திடம் நிலவிய நீண்டகால அரசியல் வெற்றிடமும் என்பதுவே பொறுத்தம்.

1988 - 2000 வரையான 3 பொதுத்தேர்தல்களும் முஸ்லிம் காங்கிரஸின் பெரிமிதமான வளர்ச்சியைக் காட்டும் அதேவேளை 2000 ற்குப்பிந்திய காலம் உடனடி வீழ்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது. முஸ்லிம் சமூக அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் முதல் 2000 ம் ஆண்டு வரையான காலம் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வுகள் நிறைந்த காலமாகும்.

1990 ல் வடக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பும் கிழக்கில் அரங்கேரிய மனித படுகொலைகளும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் நடந்தேறிய மிக மோசமான இனத்துவ அராஜகமாகவே கொள்ளப்படுதல் வேண்டும். 1915ல் நடந்தேறிய கண்டிக்கலவரம் முஸ்லிம்களின் உடமைகளையும பொருளாதாரத்தளங்களையும் மையப்படுத்தியதாகவே அமைந்தது. அவர்களது இருப்பு குறித்து எவ்வித அச்சப்பாடும் தோன்றியிருக்கவில்லை. அது சிங்கள இனத்துவத்தின் மேலாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு.

அதற்கு தமிழ்த் தலைவர்களும் பக்க வாத்தியம் வாசித்தனர். ஆனால் 1990 ல் வடகிழக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பும் - மனிதப்படுகொலைகளும் தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களின் இருப்பை பூண்டோடு அழிக்க, வன்முறைக் கலாசாரத்தைப் பயன்படுத்திய வடிவைக் காண்கின்றோம் . எனவே இரு பெறும்பேரினவாதங்களுக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகம் தனது தெரிவாக முஸ்லிம் காங்கிரஸை தெரிவுசெய்து கொண்டது. தென்னிலங்கையில் பெறும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளால் அடையமுடியாத பேரம் பேசும் பலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப்பெற்றது.

இதற்கு எதிராக பெறும்பான்மை சமூகங்கள் தமது திட்டமிட்ட செயற்பாடுகளை தொடக்கிவிட்டன. பொதுவான முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும் போக்கில் பெறும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் அரசியல் வாதிகளை பெறும்பான்மை வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத கட்சிகள் இனத்துவேசத்துடன் சிங்கள இனவாத வாக்குகளை சேகரிக்கத் தொடங்கினர். குறிப்பாக து.ஏ.P. - ஜா.ளெ. உருமய போன்ற கட்சிகள் இனத்துவேச கோசங்களை முன்வைத்தன. அதைவிட மேலான முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப ;பூசலை வலுவாக்கி கட்சிப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன.

தமிப்பேரினவாத தீவிரவாதிகள் ஆயுதமுனையில் முஸ்லிம் காங்கிரஸை ஒழித்துக் கட்ட முயற்சித்தனர். இத்தகைய இக்கட்டான சூழல் முஸ்லிம்காங்கிரஸின் இருப்பையும் செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தின. முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அரசியல் நகர்வாக கருதப்பட்ட தேசிய ஐக்கிய முன்னனி (NUA) முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஒழுங்கின் சிறப்பான வடிவமாக கருதப்பட்டது. இருப்பினும் வன்முறையாளர்களின் வெடிகுண்டு - மு.கா தலைவர்களின் மூச்சை நிறுத்தியது.



பெறும்பான்மைக் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களுக்கான வேலைத்திட்டம் கட்சியின் மூச்சை நிறுத்தியது. சிங்கள இனவாதக் கோஷங்களும் அதற்கு ஆதரவாக எழுந்த அலைகளும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கை நிலை தடுமாற வைத்தது. இதுவே 2000 ம் ஆண்டு வரையான முஸ்லிம் அரசியலின் வரலாறாக அமைந்துவிட்டது.

இனவாத சிந்தனைப் படையெடுப்பில் தொடக்கப்பட்ட இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியலும் நிர்ப்பந்தமாக இனவாதத்துள் இழக்கப்பட்டது. 1915 - 2000 ஆண்டு முஸ்லிம் அரசியலில் மத்தளமாக இரு பேரினவாதங்களினாலும் மாறி மாறி அடிபட்டுக் கொண்;டே வந்திருக்கிமன்றது. முதஸ்லிம்கள் தமக்கான அரசியல் ஒழுங்கை தனித்துவமாக சிந்திக்க சுதந்திரம் பெற்றதன் பின்னர் 40 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இஸ்லாமிய அரசியலின் சரியான வடிவத்தினுள் முஸ்லிம் சமூகம் இன்றுவரை நகரவில்லை என்ற கசப்பான உண்மை இங்கு உணர்த்தப்பட வேண்டும்.

ஆனால் மிகவிரைவில் முஸ்லிம் அரசியல் சீர்படுத்தப்பட வேண்டிய தேவை பலராலும் உணரப்படுகின்றது.


இன்று 2000 ற்குப் பின்னர்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் படுகொலையைத் தொடர்ந்து மு.காவினுள் தோன்றிய பிளவுகளும், முஸ்லிம் சமூகத்தில் முளைத்துவிட்ட அரசியல் கட்சிகளும், பெரும்பான்மை (UNP-PA) கட்சிகளும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளும் (JVP) முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வது, அமைச்சுப் பதவிகள் தருவது, முக்கிய மேடைகளில் ஏற்றுவது இன்றைய எமது அரசியல் வரலாராக பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் உரிமைகள், கோரிக்கைகள், அரசியல் இலக்கு என எல்லாமே இழக்கப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் இத்தகைய சோடிப்புக்களை பொதுவாக அவதானிக்க முடியும். முஸ்லிம்கள் அரசியல் தலைவர்கள், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல, சொத்தும், சுகமும் அனுபவிப்புக்களும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருந்ததில்லை. இவை அனைத்தும் அவர்களது அரசியல் வரவுக்கு முன்னர் ஆனால் அரசியல் பிரவேசத்தின் பின்னர் மரணம்வரை அமைச்சுப் பொறுப்பும், சொத்தும்,சுகமும் இலக்குகளாக மாறிப்போகும் நிலையே இன்றைய முஸ்லிம் அரசியலின் இலட்சினை.

சிங்கள பேரினவாதம் ஒருபுறம் தமிழ்த் தீவிரவாதம் மறுபுறமாக முஸ்லிம் சமூகத்தைத் தாக்கியழிக்கும் நேரத்திலும் முஸ்லிம் அரசியலின் அறிக்கை அரசியலில் மாற்றமில்லை. சில நிகழ்வுகளைக் குறித்துப் பேசுவதை விடவும் பொதுவாக எடுத்து நோக்கினால்.

  • தென்னிலங்கையின் இனவாத வன்முறைகள் - இனத்துவேச முயற்சிகள்.
  • வடகிழக்கில் தீவிரவாதத்தின் அடாவடித்தனங்கள் படுகொலைகள் - இனச்சுத்திகரிப்புக்கள்.
  • சுனாமி அனர்த்த நிவாரணத்தில் காட்டப்படும் பாரபட்சங்கள்.
  • நில அபகரிப்புக்கள் - வர்த்தக, பொருளாதார முடக்கங்கள்.
  • இனப்பிரச்சினைத்தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் திட்டமிட்ட புறக்கணிப்புகள்.
என முஸ்லிம் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் தொடரும் அதேவேளை - முஸ்லிம் அரசியல் இவற்றுக்குத் தரும் தீர்வுகள் எதுவும் காத்திரமாக அமைவதாகத் தெரிவதில்லை. இவை நிகழ்கால் யதார்த்தங்கள்.

சிவில் சமூக அரசியல் முன்னை விட சற்று முனைப்புடன் செயற்படுவதாகத் தென்படுகின்ற பொழுதும் அதன் வகிபாகம் எந்தளவுக்கு முஸ்லிம் அரசியலில் தாக்கமுடையதாக இருக்கின்றது. என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே தொடர்கின்றது. ஆஊளுடு - முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் சிவில் சமூகம் சார்பாக காத்திரமான நகர்வுகளை மேற்கொண்ட பொழுதும் அதனால் முஸ்லிம் அரசியலை நேரான பாதைக்குக் கொண்டுவர முடியும், என்று கூறமுடியாது.

அதற்கு நியாயமான பல காரணிகள் எமது சமூகத்தில் இன்னும் நிலவுகின்றன. ஆனாலும் குறிப்பாக இப்பிரச்சினை விவாகரத்தில் முஸ்லிம் கவுன்சில் காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்க போதுமானது.

பொதுவாக இலங்கையின் அரசியலின் தற்போதைய ஸ்திரமற்ற தன்மையும், இனப்பிரச்சினையின் பல்பட்ட தன்மையும் முஸ்லிம்களின் அரசியல் குறித்த அவதானத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. ஆனால் முஸ்லிம்களின் அரசியல் சார்ந்த மிகச்சரியான நிலைப்பாடுகளை பலமாக வெளிப்படுத்த வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய இலக்கற்ற அரசியல் போக்கானது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.


நாளை

இதே நிலையில் முஸ்லிம் அரசியல் தொடருவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக அமையாது. தற்போதைய முஸ்லிம் கட்சிமுறைமைகளும் சந்தர்ப்பவாத அரசியலும் நாளடைவில் முஸ்லிம் சமூகத்தால் புறக்கணிக்கப்படும். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவை எவ்வளவு யதார்த்தமானதோ அதே போன்று அத்தேவை இஸ்லாமிய அடிப்படைகளில் நின்றே நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் யதார்த்தமானது.

இதனையே முஸ்லிம் காங்கிரஸின் வரவும் அது சுமந்து வந்த ''இஸ்லாமிய அரசியல்|| பிரச்சாரமும் அதற்கு தோள்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுத்தளமும் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் அதன் மார்க்கத்தின் பால் கொண்டுள்ள பெரமிதமான பற்றும் இதற்குக் காரணமாகும். எனவே முஸ்லிம் சமூகத்தின் நாளைய அரசியல் இஸ்லாத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இலகுவாக மேற்கொள்ளும் அரசியலாக அமையாது.

இலங்கை போன்ற அனைத்து வளங்களும் நிறைவாகக் கொண்ட தேசமொன்றை இனவாதம் என்ற குறுகிய சிந்தனையால் சூறையாடும் பெறும்பான்மை அரசியல் வாதிகளாயினும் சிறுபான்மை அரசியல், தீவிரவாத சக்திகளாயினும், அந்நிய ஆதிக்கங்களாயினும் இலங்கையின் பொதுநலன், தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் சக்தியால் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே அத்தகைய பலம் பொருந்திய சக்தியின் பிரதான கர்த்தாவாகவோ அல்லது சாதாரண பங்காளியாகவோ முஸ்லிம் சமூகம் தன்னை அமைத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் புறையோடிப்போயுள்ள பல நூற்றாண்டுகள் பலமை பொருந்திய இனத்துவப் போக்கை உடைத்தெறிய முடியாவிடினும் அதனால் தேசிய அபிவிருத்திக்கும் பொதுநலன்களுக்கும் ஏற்படும் பாதகங்களையாவது தடுத்து நிறுத்தமுடியும் இதுவே முஸ்லிம்களின் நாளைய அரசியல் அமைப்பாக இருத்தல் அவசியமாகும்.

எமது இளைஞர்கள், எமது சந்ததிகள், எமது மார்க்கம் என எல்லாவற்றின் நலன் குறித்தும் மிகப் பொதுவாக பரந்தளவில் சிந்திக்கும் எவரும் இத்தகைய முடிவை நோக்கி வருவதே மிகப் பொறுத்தமானதும் முற்போக்கானதுமாகும்.